புத்தல உனவட்டுன என்ற இடத்தில் நிலத்தில் அதிர்வு இடம்பெற்றதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
நேற்று காலை 8.53 தொடக்கம் 8.55 வரையிலான காலப்பகுதியில் இது இடம்பெற்றதாக பிரதேச மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இருப்பினும், இவ்வாறான நில அதிர்வு எதுவும் நேற்று பதிவாகவில்லை என புவிச்சரிதவியல் ஆய்வு மற்றும் அகழ்வு அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை 2 நிலநடுக்கங்கள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.