சிங்கப்பூரின் தேசிய நினைவு சின்னமாக உள்ள ஸ்ரீமாரியம்மன் கோயில் சுமார் 200 ஆண்டுகள் பழமையானது. சிங்கப்பூருக்கு வேலைக்குச் சென்ற தமிழர்களால் இந்த கோயில் கட்டப்பட்டது. தமிழ்நாட்டில் நாகப்பட்டினம், கடலூர் போன்ற இடங்களில் இருந்து சிங்கப்பூரில் தமிழ் மக்களின் உறுதுணையோடு 1827ம் ஆண்டில் இந்த கோயில் அமைக்கப்பட்டது.
இக்கோயில் உருவாகவும், தோற்றம் பெற்று அமைவதற்கும் காரண கர்த்தாவாக இருந்தவர் நாராயண பிள்ளை என்பவர் ஆவார். தமிழ் நாட்டின் கடலூரைச் சேர்ந்த ஒருவர் தம்முடன் எடுத்து வந்த அம்மன் சிலையை மரப்பலகை, கூரையுடன் கூடிய சிறு குடில் அமைத்து சின்ன அம்மன் என்ற பெயரில் பிரஷ்டை செய்து வழிபாடு தொடங்கப்பட்டது. அந்த அம்மனே இன்று மகா மாரியம்மன் ஆலயத்தின் மூலஸ்தானத்தில் இருக்கிறது.
சிங்காப்பூரில் சீனர்கள் அதிகம் வாழும் சைனா டவுன் என்னும் பகுதியில் இந்த மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. சீனர்கள் அதிகம் வாழும் பகுதியில் அமைந்திருக்கும் காரணத்தால், சுற்றுபுறத்திலிருக்கும் சீனர்களும் மாரியம்மன் கோயிலுக்கு வந்து வழிபடுகிறார்கள். ஆண்டுதோறும் நடக்கும் தீமிதிப்பு விழாவில் சீனர்கள் பெரும்வாரியாக பங்கு பெறுகிறார்கள்.
இத்தகைய சிறப்புடைய இக்கோவில் திருவிழாக்கள் மிகவும் பிரம்மாண்டமான முறையில் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழர்களும், சீனர்களும் பெருவாரியாக கலந்து கொண்டு அம்மனை வழிபடுவார்கள். இந்தநிலையில் ஒராண்டு சீரமைப்பு பணிகளுக்கு பின் மாரியம்மன் கோயில் நேற்று மீண்டும் திறக்கப்பட்டது.
தேசிய நினைவுச் சின்னமான ஸ்ரீ மாரியம்மன் கோயில் ஓராண்டு திருப்பணிக்குப் பிறகு நேற்று பொதுமக்களின் பார்வைக்காகத் திறக்கப்பட்டது. சிங்கப்பூர் டாலர்கள் 3.5 மில்லியன் (USD 2.6 மில்லியன்) மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்றன. தமிழகத்தின் இந்து சமய மற்றும் அறநிலையத்துறையின் மறுசீரமைப்பு ஆலோசகராக உள்ள தலைமை சிற்பி டாக்டர் கே தட்சிணாமூர்த்தி தலைமையில் ஓராண்டு சீரமைப்பு நடைபெற்றது.
அதானி குழுமத்தின் மோசடியை விசாரிக்க கோரி, பட்ஜெட்டை கண்டித்து திருவாரூர் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்
இந்தநிலையில் கோயில் நேற்று திறக்கப்பட்டபோது சுமார் 20 ஆயிரம் மக்கள் கலந்து கொண்டனர். கொட்டும் மழையில் துணை பிரதமர் லாரன்ஸ் வாங், தகவல் தொடர்பு மற்றும் தகவல் அமைச்சர் ஜோஸ்பின் தியோ, போக்குவரத்து அமைச்சர் எஸ் ஈஸ்வரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் முரளி பிள்ளை மற்றும் தென்னிந்தியாவில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களும் கலந்து கொண்டனர்.
இந்தியாவை உளவு பார்க்கும் சீனா; அமெரிக்கா பரபரப்பு குற்றச்சாட்டு.!
‘‘இது பன்முக கலாச்சார சிங்கப்பூரில் வாழ்வதன் ஒரு பகுதியாகும். இங்கு முழு சமூகமும் ஒன்று கூடி ஒருவருக்கொருவர் தங்கள் கலாச்சாரத்தை பரிமாறிக் கொள்கிறார்கள். ஸ்ரீ மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவைக் கொண்டாட இங்குள்ள சுமார் 20,000 பேரின் உற்சாகத்தை, காலையில் பெய்த மழை தணிக்கவில்லை! விழாவில் பங்கேற்பதில் மகிழ்ச்சி,” என்று துணை பிரதமர் கூறினார்.