மறக்க முடியுமா: இன்று புல்வாமா தாக்குதல் நினைவு தினம் | Today is Pulwama attack anniversary

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: புல்வாமா தாக்குதல் நடைபெற்று இன்றுடன் 4 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், வீரமரணம் அடைந்த வீரர்களின் நினைவிடத்தில் ராணுவ அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.

latest tamil news

கடந்த 1989க்கு பிறகு 2019 பிப்., 14 மாலை 3.15 மணிக்கு காஷ்மீரில் மோசமான பயங்கரவாத தாக்குதல் நடந்தது. ஸ்ரீநகர் – ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில், புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற கான்வாய் மீது, சொகுசு காரில் வந்த தற்கொலைப்படை பயங்கரவாதி, தனது காரை மோதி வெடிகுண்டுகளை வெடிக்க செய்தனர்.

latest tamil news

இதில் 40 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இது இந்தியாவையும், பாதுகாப்பு படையினரையும் பெரிய அதிர்ச்சிக்குள்ளாக்கியது. புல்வாமா தாக்குதல் நடைபெற்று இன்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் புகழாரம்

வீரமரணமடைந்த வீரர்களை புகழ்ந்து பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கை: புல்வாமாவில், இதே நாளில் நாம் இழந்த தைரியமிக்க வீரர்களை நினைவுகூர்கிறோம். அவர்களின் தியாகத்தை நாம் எப்போதும் மறக்க மாட்டோம். அவர்களின் தைரியமே, இந்தியாவை வளர்ந்த மற்றும் வலிமையான நாடாக மாற்ற வேண்டும் என்ற உத்வேகத்தை அளிக்கிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.