காதலித்து கர்ப்பமாக்கிவிட்டு திருமணம் செய்ய மறுப்பதாக திரைப்பட பிரபலம் மீது காவல் நிலையத்தில் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
விஷ்ணு இடவன் என்பவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் இணை இயக்குனராகவும், அவரது படங்களுக்கு பாடலாசிரியராகவும் பணியாற்றியவர். மாஸ்டர் படத்தில் பொளக்கட்டும் பற பற, விக்ரம் படத்தில் போர்கண்ட சிங்கம் மற்றும் நாயகன் மீண்டும் வரான் ஆகிய பாடல்கள் இவர் எழுதியதுதான்.
கவின் நடிப்பில் வெற்றி பெற்றுள்ள டாடா திரைப்படத்திலும் விஷ்ணு இடவன் பாடல்கள் எழுதி உள்ளார். சினிமாவில் வளர்ந்து வரும் விஷ்ணு இடவன் தற்போது சர்ச்சை ஒன்றில் சிக்கியுள்ளார்.
அவர் இளம்பெண் ஒருவரை காதலித்து கர்ப்பமாக்கியாக கூறப்படுகிறது. இருவீட்டாரும் பேசி அவர்களுக்கு திருமணம் செய்துவைக்க முடிவு செய்துள்ளனர். இந்த நிலையில், விஷ்ணு இடவன் அப்பெண்ணைத் திருமணம் செய்ய மறுப்பதாக புகார் எழுந்துள்ளது.
அந்த பெண் விஷ்ணு இடவன் மீது சென்னை திருமங்கலத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in