உளவு பலூன் விவகாரம் தொடர்பாக, அமெரிக்காவுக்கும் – சீனாவுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், தங்கள் வான் எல்லையில் அமெரிக்காவின் பலூன்கள் 10 முறைக்கு மேல் அனுமதியின்றி பறந்துள்ளதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது.
கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி தொடங்கி இதுவரை சீன வான் எல்லையில் அமெரிக்கா பலூன்கள் நுழைந்துள்ளதாகவும், அதனை பொறுப்புடன் தொழில்ரீதியாக அணுகியிருக்கிறோம் என்று சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் தெரிவித்தார்.
அமெரிக்க வான்வெளியில் சீன உளவு பலூன் சுட்டு வீழ்த்தப்பட்ட நிலையில், இந்த விவகாரத்தில் சீனா பதிலடி கொடுத்துள்ளது.