இளவரசர் ஹரியின் முன்னாள் காதலிகளுள் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட விடயம் நினைவிருக்கலாம். தற்போது அவருடைய தாயாரிடம் பொலிசார் மன்னிப்புக் கோரியுள்ளனர்.
இளவரசர் ஹரியின் முன்னாள் காதலி
இளவரசர் ஹரி தனது நீண்ட நாள் காதலியான Chelsy Davyயைப் பிரிந்தபின் Caroline Flack என்ற பெண்ணுடன் பழகத் துவங்கியுள்ளார்.
இந்த விடயம் ஊடகங்களில் வெளியானதும், Carolineஉடைய வீடு, அவரது பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டி வீடு என அவருடன் தொடர்புடைய அனைத்து இடங்களையும் ஊடகவியலாளர்கள் மொய்க்கத்துவங்கிவிட்டார்களாம்.
இப்படி ஒரு வருத்தத்தையும் தொல்லையையும் கொடுக்கக்கூடிய ஒரு உறவு தேவையா என கருதிய ஜோடி, குறிப்பாக Carolineஉடைய குடும்பம் சந்தித்த தொல்லைகளைத் தொடர்ந்து, பிரிவதென முடிவு செய்து இருவரும் பிரியாவிடை அளித்துப் பிரிந்தனராம்.
Image: Dave Benett/Getty Images for JW Marriott Grosvenor House London
பின்னர் Lewis Burton என்ற நபரை காதலித்த Caroline, அவரைத் தாக்கியதாக வழக்குத் தொடரப்பட்டது. தான் தன் காதலரைத் தாக்கவில்லை என்று அவர் கூறியும் தான் தொகுத்து வழங்கும் Love Island நிகழ்ச்சியிலிருந்து நீக்கப்பட்டார் Caroline.
அதன் பிறகு லண்டனிலுள்ள தனது வீட்டில் உயிரற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்டார் Caroline. அவர் தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டது.
மன்னிப்புக்கோரியுள்ள பொலிசார்
தனது மகள் ஒரு பிரபலம் என்பதாலேயே அவர் மீது குற்றம் சாட்டப்பட்டதாகவும், அவரை நீதிமன்றத்துக்குக் கொண்டு சென்றதாகவும் குற்றம் சாட்டியிருந்தார் Carolineஉடைய தாயாகிய Christine Flack.
நடந்தது என்னவென்றால், தனது காதலரைத் தாக்கியதாக கூறப்பட்டதைத் தொடர்ந்து Caroline நீதிமன்றத்தில் ஆஜராகவேண்டிய நிலை உருவாயிற்று. அவருக்கு எச்சரிக்கை மட்டும் விடுத்தால் போதும் என்று பரிந்துரைக்கப்பட்டபோதும், அதை எதிர்த்து மேல்முறையீடு செய்து Caroline மீது குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளனர் பொலிசார்.
கைது செய்யப்பட்டதால் Caroline மன நலம் பாதிக்கப்பட்டதாக நீதிமன்ற விசாரணையிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
image: Channel 4
ஆகவே, தன் மகள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டதைக் குறித்து புகாரளித்திருந்தார் Carolineஉடைய தாயாகிய Christine Flack.
தற்போது, பொலிசார் Carolineஉடைய தாயாகிய Christine Flackஇடம் மன்னிப்புக் கோரியுள்ளார்கள்.
அவர்கள் என் புகாரைக் கையாண்ட விதத்துக்காக மனிப்புக்கோரியுள்ளார்கள். ஆனால், அவர்கள் Carolineஐ நடத்திய விதத்துக்காக மன்னிப்புக்கோரியிருக்கவேண்டும் என்று கூறியுள்ள Christine, இதனால் இறந்த என் மகள் திரும்பிவந்துவிடப்போவதில்லை, ஆனாலும், அவளுக்காக நான் இதைச் செய்யவேண்டியதாயிற்று என்று கூறியுள்ளார்.