வரும் மே மாதம் விற்பனைக்கு வர உள்ள 2023 ஹூண்டாய் வெர்னா (Hyundai Verna) செடான் காருக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ள நிலையில் டீசரும் வெளியிடப்பட்டுள்ளது. முன்பதிவு தொகை ரூ. 25,000 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் இந்தியாவில் உள்ள அனைத்து டீலர்ஷிப்களிலும் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் காரை முன்பதிவு செய்யலாம்.
சி-பிரிவு செடான் சமீபத்திய நவீனத்துவமான வடிவமைப்பு மொழியைப் பெறுகிறது. குறிப்பாக சர்வதேச அளவில் ஹூண்டாய் விற்பனை செய்கின்ற கார்களில் இருந்து தோற்றத்தை பகிர்ந்து கொண்டுள்ளது. முன்புறத்தில் அகலமான பெரிய கிரில் மற்றும் பானட்டின் விளிம்பில் ஒரு நேர்த்தியான எல்இடி ரன்னிங் விளக்குகளுடன் அமைந்துள்ளது.
புதிய ஹூண்டாய் வெர்னா காருக்கு டெயில்-லேம்ப்கள் வெளிப்புறமாக நீண்டுள்ளதால் தனித்துவமான தோற்றத்தை பெறுகிறது. டெயில்-லேம்ப்கள் எல்இடி லைட் பாருடன் இணைக்கப்பட்டு, கிரிஸ்டல் போன்ற செருகல்களைக் கொண்டு கூடுதலாக, லைட் பார் சேர்க்கப்பட்டுள்ளதால் இந்த காருக்கு தனித்துவமான தோற்றத்தை அளிக்கிறது.
2023 ஹூண்டாய் வெர்னா
இரண்டு 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின்களை மட்டும் பெறும் வெர்னா காரில் புதிய 1.5 லிட்டர் டைரக்ட் இன்ஜெக்ஷன் டர்போ-பெட்ரோல் சுமார் 160hp பவரை வெளிப்படுத்தும். இந்த எஞ்சின் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 7-ஸ்பீடு டிசிடியுடன் இணைக்கப்படும்.
அடுத்து, 1.5-லிட்டர் பெட்ரோல் என்ஜின் ஹூண்டாய் வெர்னா காருக்கு ஆரம்ப நிலை எஞ்சினாக இருக்கும். இதில் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது IVT, CVT ஆட்டோமேட்டிக் இடம்பெற்றிருக்கலாம்.
இந்த புதிய காரில் டீசல் எஞ்சின் ஆப்ஷன் இல்லை. இரண்டு இன்ஜின்களும் RDE மற்றும் E20 எரிபொருளுக்கு ஏற்றதாக உள்ளது.
EX, S, SX மற்றும் SX(O) ஆகிய நான்கு வேரியண்டில் கிடைக்கும். இந்த செடானில் 7 நிறங்கள் மற்றும் 2 டூயல் டோன் வண்ண விருப்பங்களில் கிடைக்கும். 3 புதிய வண்ணங்கள் – அபிஸ் பிளாக் (புதியது), அட்லஸ் ஒயிட் (புதியது) மற்றும் டெல்லூரியன் பிரவுன் (புதிய & பிரத்தியேகமானது).
வரும் நாட்களில் புதிய வெர்னா பற்றிய கூடுதல் விவரங்களை ஹூண்டாய் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது, இந்த ஆண்டு மே மாதத்தில் விலை அறிவிப்பு வெளியாகும். வெர்னா காருக்கு போட்டியாக ஹோண்டா சிட்டி, மாருதி சியாஸ், ஃபோக்ஸ்வேகன் விர்டஸ் மற்றும் ஸ்கோடா ஸ்லாவியா போன்ற மாடல்கள் உள்ளன.