டெல்லி: அதானி குழும நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜெயதாக்கூர் என்பவர் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்துள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவன அறிக்கை அடிப்படையில் விசாரிக்க அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.