“2019 முதல் 2021 வரை சுமார் 1.12 லட்சம் தினக்கூலி தொழிலாளர்கள் தற்கொலை" – மத்திய அமைச்சர் தகவல்!

2019 முதல் 2021 வரையிலான காலகட்டம் என்பது கிட்டத்தட்ட உலகையே கொரோனா எனும் தொற்றுநோய் அச்சுறுத்திய காலகட்டம். அப்போதுதான் இந்தியா முழுக்க ஊரடங்கு உத்தரவும் போடப்பட்டது. இதில் புலம்பெயர் தொழிலாளர்கள், தினக்கூலி தொழிலாளர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர்.

தினக்கூலி தொழிலாளர்கள் தற்கொலை

இந்த நிலையில், 2019 முதல் 2021 வரையில், 1.12 லட்சத்துக்கும் அதிகமான தினக்கூலி தொழிலாளர்கள் தற்கொலை செய்துகொண்டதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.

மக்களவையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில், 2019-லிருந்து 2021 வரையிலான காலகட்டத்தில் உயிரிழந்த தினக்கூலி தொழிலாளர்கள் தொடர்பாக காங்கிரஸ் எம்.பி சு.திருநாவுக்கரசர் கேள்வியெழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ், “2019-ல் 32,563 பேர், 2020-ல் 37,666 பேர், 2021-ல் 42,004 பேர் என மொத்தம் 1,12,233 தினக்கூலி தொழிலாளர்கள் இறந்திருக்கின்றனர். மேலும் இந்த காலகட்டத்தில், தினக்கூலி தொழிலாளர்கள் உட்பட மொத்தம் 4.56 லட்சம் பேர் தற்கொலை செய்துகொண்டனர்.

மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ்

இதில் 66,912 பேர் இல்லத்தரசிகள், 53,661 பேர் சுயதொழில் செய்பவர்கள், 43,420 பேர் சம்பளதாரர்கள், 43,385 பேர் வேலையில்லாதவர்கள், 35,950 பேர் மாணவர்கள், 31, 839 பேர் விவசாயத் தொழிலில் ஈடுபட்டவர்கள். அதேசமயம், 2008-ம் ஆண்டின் அமைப்புசாரா தொழிலாளர் சமூகப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நலத்திட்டங்களை வகுத்து, தினக்கூலி தொழிலாளர்கள் உட்பட அமைப்புசாராத் துறையிலுள்ள தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பை வழங்குவதற்கு அரசாங்கம் கடமைப்பட்டிருக்கிறது” என்று கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.