நாக்பூரில் ராஜ்ரத்னா புரஸ்கார் சமிதி ஏற்பாடு செய்திருந்த விருது வழங்கும் விழாவில் கலந்துக்கொண்டு பேசிய ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், “ஒரு நபர், ஒரு சிந்தனை, ஒரு குழு, ஒரு சித்தாந்தத்தால் நாட்டை உருவாக்கவோ அல்லது உடைக்கவோ முடியாது. உலகின் நல்ல நாடுகள் எல்லாவிதமான எண்ணங்களையும், சித்தாங்களையும் கொண்டிருக்கின்றன. அவற்றிலும் எல்லாவிதமான அமைப்புகளும், மேலும் பல அமைப்புகளுடனும் வளர்ந்து வருகின்றன.
நாக்பூரின் முன்னாள் அரச குடும்பமான போன்ஸ்லே குடும்பம் ஆர்.எஸ்.எஸ் நிறுவனர் கே பி ஹெட்கேவார் காலத்திலிருந்தே ஆர்.எஸ்.எஸ்-ஸுடன் தொடர்புடையவர்கள். சத்ரபதி சிவாஜி மகாராஜ் ஸ்வராஜ்யத்தை (இறையாண்மை கொண்ட நாடு) நிறுவியபோது, தென்னிந்தியாவை அவர் காலத்தின் அட்டூழியங்களிலிருந்து விடுவித்தார். நாக்பூர் போன்ஸ்லே குடும்பத்தின் ஆட்சியின் போது கிழக்கு மற்றும் வட இந்தியா அட்டூழியங்களிலிருந்து காப்பாற்றப்பட்டது” எனத் தெரிவித்திருக்கிறார்.