எதிர்வரும் 18 ஆம் திகதி மகா சிவராத்திரி விழா மன்னார் மாவட்டத்தில் பாடல் பெற்ற திருத்தலமான திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் வெகு சிறப்பாக இடம்பெறவுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் சனிக்கிழமை இடம்பெறவுள்ள சிவராத்திரி தினத்தை முன்னிட்டு அதற்கான முன்னேற்றுப்பாட்டு கலந்துரையாடல் மன்னார் மாவட்ட செயலகத்தில் நேற்று (14) நடைபெற்ற போதே அரசாங்க அதிபர் இதனை தெரிவித்தார்.
சகல துறைசார் திணைக்கள அதிகாரிகள் மற்றும் திருக்கேதீஸ்வர ஆலய செயலாளர் ஆகியோருடன் இது தொடர்பான கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது போக்குவரத்து, பாதுகாப்பு சுகாதாரம் மற்றும் குடிநீர் போன்ற முக்கியமான விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
வளமையை விட இம்முறை திருக்கரீஸ்வர ஆலய சிவராத்திரி விழாவிற்கு அதிக பக்த அடியார்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அரசாங்க அதிபர் குறிப்பிட்டுள்ளார்.