இனி இவர்கள் ரேஷன் கார்ட் பெற முடியாது! அதிரடி உத்தரவு!

இந்திய குடிமகன்கள் அல்லாதவருக்கு குடும்ப அட்டை வழங்க கூடாது என உணவுப்பொருள் வழங்கல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. ரேஷன் கடைகளில் Pos இயந்திரம் மூலம் மட்டுமே வேட்டி, சேலை தர வேண்டும் எனவும் இருப்பு வைத்துக் கொண்டு விநியோகம் செய்யாமல் இருக்க கூடாது எனவும் மேலும் கூறியுள்ளது.  ரேஷன் கடைகள் திறக்கப்படவில்லை என்றால் அது குறித்து வட்ட வழங்கல் அலுவலரிடம் விளக்கம் கேட்கப்படும் எனவும் உணவுப்பொருள் வழங்கல்துறை எச்சரித்துள்ளது.

உணவுப்பொருள் வழங்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ள சமீபத்திய அறிவிப்பில் இந்திய குடிமகனாக இல்லாத எவருக்கும் குடும்ப அட்டை வழங்க கூடாது என்றும் அரசின் வேட்டி சேலைகள் பிஓஎஸ் எந்திரம் மூலம் மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  குறிப்பாக ரேஷன் கடைகளில் எந்த காரணத்தை கொண்டும் இருப்பு வைத்திருக்கக் கூடாது எனவும், பணி நாட்களில் ரேஷன் கடைகளை காலை முதலே திறந்து பொருட்களை விநியோகிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. சம்பத்தப்பட்ட நபர் வேறு மாவட்டம், வெளி மாநிலங்களில் ரேஷன் அட்டை வைத்துள்ளாரா என்பதை கள ஆய்வு செய்ய வேண்டும் என்றும் ஆதார் உடன் வங்கி கணக்கை இணைக்க ரேஷன் அட்டைதாரிடம் அறிவுறுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மின்னணு குடும்ப அட்டைகளின் வகைகள்

தமிகழத்தில் மின்னணு குடும்ப அட்டைகள் 4 வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

– வெளிர் பச்சை நிற அட்டைகள் கொண்டிருந்தால் அரிசி மற்றும் பிற பொருட்கள் வாங்கலாம்.
– வெள்ளை நிற அட்டை மூலம் பரிந்துரைக்கப்பட்ட அளவுக்கு மேல் கூடுதலாக 3 கிலோ சர்க்கரை பெறலாம்.
– நியாய விலைக் கடையில் பொருட்களைப் பெறும் தகுதி அளவுகோலில் வராதோர் மற்றும் பொருட்கள் தேவையில்லை என்போர் பொருள்களில்லா அட்டை  பெறுவர்.
– காவல் ஆய்வாளர் வரையிலான பதவியில் உள்ள காவலர்களுக்கு காக்கி நிற அட்டைகள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.