வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
அங்காரா: துருக்கியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய ராணுவத்தினர் தற்காலிக மருத்துவமனை அமைத்து மருத்துவ சேவை அளித்து வருவது அந்நாட்டு மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
துருக்கி மற்றும் சிரியாவில், 6ம் தேதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது, ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவானது. இதைத் தொடர்ந்து ஏற்பட்ட வலுவான நிலநடுக்கம் மற்றும் நில அதிர்வுகளால், 12 ஆயிரம் கட்டடங்கள் தரைமட்டமாகின. பாதிக்கப்பட்ட பகுதிகளில் இடிபாடுகளில் சிக்கி உள்ளோரை மீட்கும் பணி இரவு, பகலாக நடந்து வருகிறது. இதுவரை 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
துருக்கி, சிரியாவிற்கு இந்தியா ஏராளமான உதவிகளை செய்து வருகிறது. ‘ஆபரேஷன் தோஸ்த்’ என்ற பெயரில், இந்தியாவை சேர்ந்த ராணுவ வீரர்கள், மீட்பு படையினர், தேசிய பேரிடர் மீட்பு படையினரும் சென்றுள்ளனர். உ.பி., மாநிலம் ஆக்ராவில் செயல்படும் ராணுவ மருத்துவமனையை சேர்ந்த டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்டோரும் துருக்கியில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
துருக்கியில் நிலநடுக்கத்தால் சில மருத்துவமனைகளும் தரைமட்டமாகின. இதனால், மீட்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க முடியாமல் இருந்தது. இதனை இந்திய படையினர் போக்கியுள்ளனர். காயங்களுடன் மீட்கப்பட்டவர்களுக்கு தற்காலிகமான மருத்துவமனைகளை ஏற்பாடு செய்து, அங்கு மருத்துவ உதவிகளை செய்து வருகின்றனர். இந்திய ராணுவத்தினரின் இந்த உதவியால் நெகிழ்ந்த துருக்கி நாட்டினர், இந்தியாவை பாராட்டி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement