ரஷ்யா, புலம்பெயர்ந்தோரை கட்டாயப்படுத்தி உக்ரைன் போருக்கு அனுப்புவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய ஆசிய சிறைக்கைதிகள்
ரஷ்யாவுக்கு ஆதரவாக போரிட்டு வரும் அமைப்பு Wagner group என்னும் அமைப்பு. இந்த அமைப்பில் ஏராளம் தன்னார்வலர்கள் ரஷ்யாவுக்கு ஆதரவாக போரிட்டுவந்தனர்.
Credit: AP
தற்போது போரிட தன்னார்வலர்கள் கிடைக்காததால், புலம்பெயர்ந்தோரை, அதாவது, மத்திய ஆசியாவைச் சேர்ந்த சிறைக்கைதிகளை Wagner குழுவினர் கட்டாயப்படுத்தி உக்ரைன் போருக்கு அனுப்புவதாக பிபிசி தொலைக்க்டாசி தெரிவித்துள்ளது.
சமூக ஆர்வலரான Olga Romanova இதுகுறித்துக் கூறும்போது, உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் ஆகிஅய் நாடுகளைச் சேர்ந்தவர்கள், ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திடக் கட்டாயப்படுத்தப்பட்டு போர் முனைக்கு அனுப்பிவைக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.