Tamannaah:காதலர் தினத்தில் தமன்னாவுடனான காதலை உறுதி செய்த விஜய்?

Vijay Varma instagram post:நடிகர் விஜய் வர்மா செய்த காரியத்தை பார்த்த தமன்னா ரசிகர்களோ, இது கண்டிப்பாக காதலே தான் என தெரிவித்துள்ளனர்.

தமன்னாபாலிவுட் படங்களில் நடித்து வருபவர் விஜய் வர்மா. அவரும், நடிகை தமன்னாவும் காதலிப்பதாக பேசப்படுகிறது. இந்நிலையில் காதலர் தினத்தில் இரண்டு பேரின் பாதங்கள் மட்டும் தெரியும்படி எடுக்கப்பட்ட புகைப்படத்தை இன்ஸ்டா ஸ்டோரீஸில் போஸ்ட் செய்துள்ளார் விஜய் வர்மா. அவர் அந்த போஸ்ட்டில் யார் பெயரையும் குறிப்பிடவில்லை.

​Tamannaah, Vijay Varma:தமன்னா காதலிக்கும் விஜய் யார்னு தெரியுமா?

காதல்விஜய் வர்மா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்களோ, ஒன்று விஜய்யின் பாதம், மற்றொன்று தமன்னாவின் பாதம். தமன்னாவின் ஜாக்கெட் தெரிகிறது. தானும், தமன்னாவும் காதலிப்பதை தான் விஜய் வர்மா இப்படி போஸ்ட் போட்டு உறுதி செய்திருக்கிறார். ஓமைகாட், தமன்னாவும், விஜய் வர்மாவும் காதலர்கள் தான் என்பது உறுதியாகிவிட்டது என்கிறார்கள்.
சந்திப்புஒரு பட நிகழ்ச்சியில் தான் விஜய் வர்மாவும், தமன்னாவும் முதல் முறையாக சந்தித்தார்கள். அதன் பிறகு கோவாவில் வேலை செய்யும்போது அவர்களுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டது. புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது விஜய் வர்மாவும், தமன்னாவும் லிப் டூ லிப் முத்தம் கொடுத்துக் கொண்டபோது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி வைரலானது.

நக்கல்அந்த முத்த வீடியோ வைரலான பிறகு விஜய் வர்மாவும், தமன்னாவும் ஜோடியாக வலம் வந்தார்கள். இருப்பினும் காதலை உறுதி செய்யவில்லை. இதற்கிடையே மிரர் செல்ஃபி எடுத்து லன்ச் டேட் என தன் காதல் பேச்சு பற்றி நக்கலாக போஸ்ட் போட்டார் விஜய் வர்மா. அதை பார்த்த தமன்னாவின் ரசிகர்களோ, அப்படி என்றால் தம்முவை காதலிக்கவில்லையா என கேள்வி எழுப்பினார்கள். இந்நிலையில் மீண்டும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் ஆவலை தூண்டிவிட்டிருக்கிறார் விஜய் வர்மா.
ரசிகர்கள்தமன்னாவின் ரசிகர்கள் கூறியிருப்பதாவது, தம்முவை காதலிப்பது எல்லாம் சரி. போஸ்ட் போடுவதுடன் நின்றுவிடாமல் அவரை திருமணம் செய்து கொள்ளுங்கள். உங்கள் இருவரையும் மணக்கோலத்தில் பார்க்க காத்துக் கொண்டிருக்கிறோம் என தெரிவித்துள்ளனர்.

சீரியஸ் இல்லைகாதல் விவகாரம் குறித்து தமன்னா, விஜய் வர்மாவுக்கு நெருக்கமான ஒருவர் கூறியதாவது, அவர் சீரியஸாக இல்லை. விஜய்யும், தமன்னாவும் சேர்ந்து நேரம் செலவிட விரும்புகிறார்கள். தற்போதைக்கு அவ்வளவு தான் என்றார். சீரியஸா இல்லையா, கேஷுவல்னா தமன்னாவை விட்டு பிரிந்துவிடுவாரா விஜய் வர்மா என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். தமன்னாவுக்கு வயது ஏறிக் கொண்டே போகிறது. சீக்கிரம் திருமணம் நடந்தால் நன்றாக இருக்கும். பண விஷயத்தில் தம்மு செட்டிலாகிவிட்டார். அதில் அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்கிறார்கள் ரசிகர்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.