தமிழ்நாடு முதல்வர்
மு.க.ஸ்டாலின்
சேலம் சென்றுள்ளார். முன்னதாக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் சேலம் கமலாபுரம் விமான நிலையம் வந்தார். அங்கிருந்து சாலை மார்க்கமாக சேலம் மாநகரை நோக்கி புறப்பட்டு சென்றார். வழியில் ஓமலூர் தனி வட்டாட்சியர் அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். கோப்புகளை கேட்டு அதிகாரிகளை தெறிக்க விட்டுள்ளார். இதனால் ஓமலூரில் பெரும் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சேலம் மண்டலப் பகுதிகளில் கள ஆய்வு மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். இன்றும், நாளையும் என இரண்டு நாட்கள் சேலத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முகாமிடவுள்ளது குறிப்பிடத்தக்கது. இதையொட்டி 1,500 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.
பிப்ரவரி 15, காலை 10.30 மணி – சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் நாமக்கல் மாவட்ட தொழில் துறையினர் மற்றும் விவசாயிகளை சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
அதன்பிறகு ”நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் பயன்பெற்று வரும் கல்லூரி மாணவ, மாணவிகளை சந்திக்கிறார்.
மாலை 5 மணி – சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் நாமக்கல் மாவட்ட அதிகாரிகளுடன் சட்ட ஒழுங்கு ஆய்வு கூட்டத்தில் பங்கேற்கிறார். இதில் வட்ட ஒழுங்கு பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்யவுள்ளார்.
நாளை காலை 10.30 மணி – சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் நாமக்கல் மாவட்ட ஆட்சியர்கள் உடனான ஆய்வுக் கூட்டம் நடைபெறுகிறது.