நலத்திட்ட செலவை விட இம்ரான்கானின் பயணச் செலவு அதிகம்: பாகிஸ்தானில் ‛‛பகீர்| Imran Khan’s Home-To-Office Travel Cost 5 Times Key Project: Report

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஆட்சியில், ஏழைகளுக்காக தங்கும் விடுதி கட்ட ஆன செலவை விட, அவர் வீட்டில் இருந்து அலுவலகம் வருவதற்கு செய்யப்பட்ட செலவு அதிகம் என்பது தெரியவந்துள்ளது.

பாகிஸ்தானில் பிரதமராக இம்ரான் கான் இருந்த போது, ஏழைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் திட்டங்களை நிறைவேற்றி உள்ளதாக அறிவித்து இருந்தார். அதில் முக்கியமான திட்டமாக ஏழைகளுக்காக தங்கும் விடுதி திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதில், சுகாதாரம், தரமான உணவு, பாதுகாப்பான வாழும் சூழ்நிலை ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

இந்த திட்டத்தின்படி, நாடு முழுவதும் 39 தங்கும் விடுதிகள் கட்டப்பட்டன. இதற்கு 189.015 மில்லியன் ரூபாய்( பாக்., மதிப்பில்) செலவாகி உள்ளது. உணவு விநியோகம் செய்வதற்காக 40 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. உணவு மற்றும் வாகனங்களுக்கு என 2022 மார்ச் வரை 161.88 மில்லியன் ரூபாய் செலவாகி உள்ளது.

ஆனால், இம்ரான் கான், தனது வீட்டில் இருந்து பிரதமர் அலுவலகம் வரை செல்வதற்கு மட்டும் 984 மில்லியன் ரூபாய் செலவாகி உள்ளது தெரியவந்துள்ளது. இம்ரான் கான் பதவி விலகிய பிறகு, ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான ஆட்சியில் முந்தைய அரசின் செலவுகள் குறித்து தகவல் வெளியாகி வருகிறது.

பாகிஸ்தானின் தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் வெளியிட்ட ஆவணங்களின்படி, இம்ரான் கான் பயணத்திற்கு 472.36 மில்லியன் ரூபாயும், அதற்காக அவர் பயணித்த ஹெலிகாப்டரை பராமரிக்க 511.995 மில்லியன் ரூபாயும் செலவு செய்யப்பட்டுள்ளது.

இம்ரான் கான் பயணத்திற்கு மட்டும்,

2018 ஆக., முதல் 2018 டிச., வரை ரூ.37.93 மில்லியன் ரூபாயும்,

2019 ல் ரூ.131.94 மில்லியன் ரூபாயும்

2020 ல் 143.55 மில்லியன் ரூபாயும்

2021ல் 123.8 மில்லியன் ரூபாயும்

2022 ஜன., முதல் மார்ச் வரை ரூ.35.14 மில்லியனும் செலவாகி உள்ளது.

போக்குவரத்து செலவையும் தாண்டி, 2018 -19 ஆண்டு காலகட்டத்தில் பிரதமர் இல்லம் மற்றும் அலுவலகத்திற்கு மட்டும் மின்சார கட்டணமாக 149.19 மில்லியன் ரூபாய் செலவு செய்யப்பட்டு உள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.