பாகிஸ்தானில் நெய் விலை சர்ச்சையில் இம்ரான் கான்| Imran Khan in ghee price controversy in Pakistan

இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் ஒரு கிலோ நெய், 60 ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்கப் படுவதாக, முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கூறியதை அடுத்து, சமூக வலைதளங்களில் அவரை பலரும் விமர்சித்து வருகின்றனர்.

நம் அண்டை நாடான பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. அத்தியாவசியப் பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. பெட்ரோலிய பொருட்கள் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசியதாவது:

பாகிஸ்தானின் பொருளாதார நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசின் தவறான நிர்வாகமே இதற்கு காரணம்.

மாவு உள்ளிட்ட உணவு பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலையும், இதற்கு முன் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது. ஒரு கிலோ நெய், பாகிஸ்தான் மதிப்பில், 60 ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

நிதி நெருக்கடியை தவிர்க்க அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை. புற்றுநோய்க்கு, சாதாரண வலி நிவாரணி மருந்து கொடுப்பது போல் அரசு நடவடிக்கை உள்ளது.

உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், விரைவில் இலங்கைக்கு ஏற்பட்டது போன்ற நிலைமை நமக்கும் ஏற்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நெய் விலையை, 60 ஆயிரம் கோடி ரூபாய் என வாய் தவறி, இம்ரான் கான் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதை வைத்து பலரும் அவரை, சமூக வலைதளங்களில் கிண்டலும், கேலியும் செய்து வருவதுடன், கடுமையாக விமர்சித்தும் வருகின்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.