ஸ்ரீநகர், ஜம்மு – காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு வழியாக ஊடுருவ முயன்ற பயங்கரவாதியை, நம் பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.
ஜம்மு – காஷ்மீரில் பயங்கரவாத கும்பலின் ஊடுருவல் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன.
நம் அண்டை நாடான பாக்.,கைச் சேர்ந்த பயங்கரவாதிகளின் இந்த ஊடுருவலை, பாதுகாப்புப் படையினர் முறியடித்து பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், தங்தார் செக்டார் பகுதியில் ஊடுருவ முயன்ற பயங்கரவாதி, பாதுகாப்புப் படையினரால் நேற்று சுட்டுக்கொல்லப்பட்டார்.
இது குறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:
தங்தார் பகுதியில் நேற்று பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டபோது, எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே மூன்று பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பது தெரியவந்தது.
அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டபோது, அவர்கள் திருப்பி தாக்கினர். இந்த சண்டையின் முடிவில், பயங்கரவாதிகளில் ஒருவர் கொல்லப்பட்டார்; இரு பயங்கரவாதிகள் தப்பிச் சென்றனர்.
பின்பு நடந்த தேடுதல் வேட்டையில், உயிரிழந்த பயங்கரவாதியின் உடல் கைப்பற்றப்பட்டது. அத்துடன் ஏ.கே., ரக துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் மற்றும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement