தந்தையானார் சூப்பர் சிங்கர் புகழ் அஜய் கிருஷ்ணா..!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கு ஒன்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. மேலும், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு நிகராக வித்தியாசமான கான்செப்டில் ஒளிபரப்பாகும் ஒளிபரப்பி வருகிறார்கள். அதில் பல ஆண்டு காலமாக மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இது ஜூனியர், சீனியர் என்று இரு பிரிவில் நிகழ்ச்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் ஏகப்பட்ட பேருக்கு வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்களின் பேராதரவை பெற்றவர் அஜய் கிருஷ்ணா. இவர் பிரபல பாடகர் உதித் நாராயணன் போல் அப்படியே பாடி பலமுறை நாராயணன் வியக்க வைத்திருக்கிறார். அஜய் கிருஷ்ணா சென்னையை சேர்ந்தவர்.

இந்நிலையில், அஜய் கிருஷ்ணா,ஜெஸி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இவர் ஒரு சில மாதங்களுக்கு முன்பு தன்னுடைய பிறந்தநாளில், தான் அப்பாவாக போகும் மகிழ்ச்சியை ரசிகர்களோடு பகிர்ந்து இருந்தார்.

இந்த பிப்ரவரி 12ஆம் தேதி இவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. ஆண் குழந்தை பிறந்து இருக்கும் மகிழ்ச்சியான செய்தியை அஜய் கிருஷ்ணா ரசிகர்களிடம் பகிர்ந்து இருக்கிறார்.

தன்னுடைய மனைவியோடு கர்ப்ப காலத்தில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு அவர் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் இறுதியாக என்னுடைய மகன் வந்துவிட்டான் நாங்கள் பெற்றோராக மாறிவிட்டோம் எங்களுக்கு ஆசி வழங்கி வந்த அனைவருக்கும் நன்றி என்று குறிப்பிட்டு இருக்கிறார். 


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.