துருக்கி மற்றும் சிரியா நிலநடுக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 42 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
துருக்கியில் மட்டும் பலியானவர்களின் எண்ணிக்கை 36 ஆயிரத்து 187 என அறிவிக்கப்பட்டுள்ளது. இடிபாடுகளில் சிக்கி தவித்தவர்களின் குரல்களை கேட்டபோது தாங்கள் மகிழ்ச்சியுடன் ஓடோடி சென்று அவர்களை காப்பாற்றும் முயற்சிகளில் ஈடுபட்டதாக சுரங்கத் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே 248 மணி நேரத்துக்கு பின்னர் இடிபாடுகளில் சிக்கி தவித்த 17 வயது சிறுமி மீட்கப்பட்டதாக துருக்கி ஊடக நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, துருக்கி சென்றுள்ள நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன் பெர்க் அதிபர் எர்டோகனை சந்தித்து பேசினார்.