சேலம் அருகே உள்ள கருப்பூரில் 40 ஆண்டுகளுக்கு முன்னர் தத்தெடுக்கப்பட்ட சிறுமி தற்போது திருமணமாகி கணவருடன் வந்து தமது பெற்றோரை தேடினார்.
மீனாட்சி என்ற பெயரில் இருந்த இவர் 3 வயது குழந்தையாக இருந்த போது சென்னை பல்லாவரம் மெட்ராஸ் கிறிஸ்டியன் சில்ட்ரன்ஸ் ஹோமில் விடப்பட்டு உள்ளார்.
பின்னர் அங்கிருந்து டென்மார்க் பெற்றோரால் தத்தெடுக்கப்பட்டு அங்கு வளர்ந்த மீனாட்சி, லிசா என்ற பெயருக்கு மாறினார்.
இந்த நிலையில் தற்போது இந்தியா வந்துள்ள லிசா, கணவர் பேட்டரியுடன் சேலம் வந்து பெற்றோரை தேடினார் ஆனால் கிடைக்க வில்லை.
இதையடுத்து கருப்பூர் காவல்நிலையத்தில் தனது செல்பேசி எண்ணை கொடுத்து, பெற்றோர் குறித்த தகவல் தருமாறு கூறி சென்றுள்ளார்.