அதிமுகவில் ஜாதி மத பேதமில்லை: கூட்டணி வேறு கொள்கை வேறு – எடப்பாடி பழனிசாமி பரப்புரை

வெற்றிக்காக கூட்டணி அமைப்பது எந்த வகையிலும் கொள்கையை பாதிக்காது வெற்றி வேறு கொள்கை வேறு என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
ஈரோடு கிழக்குஇடைத்தேர்தலில் இரண்டாவது நாளாக பரப்புரை மேற்கொண்ட முன்னாள் முதல்வர்p எடப்பாடி பழனிசாமி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், அதிமுக ஆட்சி காலத்தில் ஈரோடு பகுதிக்கு செய்த திட்டங்களான். குடிநீர் திட்டம், மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல், பேருந்து நிலையம் புணரமைப்பு மற்றும் ஈரோடு திருச்செங்கோடு நான்கு வழி சாலை ஈரோடு பெருந்துறை நான்கு வழி சாலை ஆகிய திட்டங்கள் அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்டது.
ஆனால், திமுகவினர் இதுவரை எந்த திட்டமும் ஈரோட்டுக்கு செய்யவில்லை. 21 மாதங்களாகியும் சொன்ன தேர்தல் அறிக்கையை நிறைவேற்றாத திமுகவினர் அதிமுக கொண்டு வந்த திட்டங்களையும் முடக்கியுள்ளளனர். தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட வாக்குறுதிகளில் 85 சதவீதம் நிறைவேற்றப்பட்டதாக ஸ்டாலின் பொய் சொல்கிறார். மாதம் ஆயிரம் ரூபாய் பெண்கள் ஊக்கத்தொகை, கேஸ் மானியம் ஆகியவற்றை வாக்கு கேட்க வரும்போது, திமுகவினரிடம் கேளுங்கள்.
image
தற்போது 25 அமைச்சர்கள் இந்த தொகுதியில் முகாமிட்டு பணியாற்றி வருகின்றனர். சாலை விளக்கு போன்ற மக்களின் அடிப்படை பிரச்னைகள் குறித்து கேட்பதுடன் தேர்தல் முடிந்தவுடன் செய்து தருவதாக அமைச்சர்கள் தெரிவிக்கின்றனர். அதனை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம். முதியோர் உதவித்தொகை மாணவர்களுக்கான லேப்டாப் திட்டம் போன்ற பல்வேறு அதிமுகவின் திட்டங்களை ரத்து செய்து இருக்கிறார்கள். அதிமுக ஆட்சி மீண்டும் மலர்ந்த உடன் இந்த திட்டங்களுக்கு உயிர் கொடுக்கப்படும்,
திமுகவினர் மக்களை அடைத்து வைத்து இந்த தேர்தலை சந்திக்கின்றனர். எங்கு அனுப்பி வைத்தாலும் அதிமுக தடைகளை மீறி வெற்றி பெறும். செந்தில் பாலாஜி இதுவரை ஐந்து கட்சிகளுக்கு தாவி இருக்கிறார். அடுத்த தேர்தலில் எந்த கட்சியில் இருப்பார் என தெரியாது. தேர்தல் அதிகாரிகள் மக்களை திமுக அடைத்து வைக்கவில்லை என பச்சை பொய் சொல்கிறார்கள். அதிமுகவினர் இந்த புகார் தொடர்பாக ஆதாரம் இருக்கிறது. நீதிமன்றத்தில் தேர்தல் அதிகாரிகள் மீது வழக்கு தொடரப்படும்.
image
சிறுபான்மை மக்களுக்கு அதிமுக பாதுகாப்பு அரணாக இருந்து வருகிறது. கடந்த 33 ஆண்டுகாலமாக தமிழகத்தில் ஆட்சி செய்யும் அதிமுகவால் சிறுபான்மை மக்கள் ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை. சிறுபான்மை மக்களுக்கு பல்வேறு திட்டங்களை செய்து வந்தது.; அதிமுக, சிறுபான்மை மக்களுக்கு எதிரான கட்சி போல ஒரு யுத்தியை அவர்கள் கையாண்டு வருகிறார்கள், அதிமுக எப்போதும் சிறுபான்மை மக்களின் அரணாக இருக்கும்,
திமுக பாஜகவுடன் கூட்டணி வைத்தால் தப்பில்லை. ஆனால், நாங்கள் கூட்டணி வைத்தால் தப்பா?; வெற்றிக்காகவும் அரசியல் சூழ்நிலைக்காகவும் வைக்கும் கூட்டணி கொள்கையை எந்த வகையிலும் பாதிக்காது. அதிமுகவின் கொள்கையில் யாரும் தலையிட முடியாது. அதிமுகவில் ஜாதி மத பேதமில்லை. அதிமுகவில் ஆண் ஜாதி, பெண் ஜாதி என இரண்டு ஜாதி தான் உள்ளது என்றார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.