சென்னை ஐஐடி ஆய்வகத்தில் வைரத்தை செயற்கையாக உருவாக்க 242 கோடி ரூபாயை இந்திய அரசு ஒதுக்கியுள்ளது.
இந்திய அரசு ஒப்புதல்
வைரம் இயற்கையாக உருவாக 100 முதல் 300 கோடி ஆண்டுகள் ஆகும். ஆனால் ஆய்வுக்கூடத்தில் 15-30 நாட்களில் வைரத்தை உருவாக்க முடியும் என்கின்றனர்.
அவ்வாறு தயாரிக்கப்படும் வைரமும் இயற்கை வைரத்தைப் போலவே பண்புகளைக் கொண்டிருக்கும், அதே சமயம், இயற்கை வைரத்தைவிட நிச்சயம் விலை குறைவாக இருக்கும் என ஆராய்சியாளர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில், இந்த வைரத்தை ஐஐடி சென்னையில் ஆய்வுக் கூடத்தில் உருவாக்க, ரூ. 242 கோடி ரூபாயை ஒதுக்கி, ஆய்விற்கு ஒப்புதலும் அளித்துள்ளது இந்திய அரசு.
Mikael Buck/Shutterstock
பின்னணி
2019-ல் பிரித்தானிய இளவரசர் ஹரி தனது மனைவி மேகன் மார்க்கலுடன் ஒரு சந்திப்புக்காக வந்தார். அப்போது, மேகன் அணிந்திருந்த காதணி மக்களிடையே பிரபலமானது. அந்த வைர ஆபரணம், ஆய்வுக்கூடத்தில் வெறும் ஐந்தே நாட்களில் உருவாக்கப்பட்டது.
இது பிரித்தானியாவின் தலைப்புச் செய்தியாக மாறியது. இதையடுத்து பல பெண்கள் ஆய்வுக் கூடங்களில் உருவாக்கப்படும் வைரங்களை வாங்க ஆரம்பித்தனர். இது உலகம் முழுவது பரவி, இப்போது இந்தியாவிற்கும் வந்துள்ளது.
மற்ற நன்மைகள்
ஆய்வகத்தில் வளர்க்கப்படும் வைரங்களை ஆராய்வது, 5G மற்றும் 6G, காந்தவியல், வெப்ப மேலாண்மை, சென்சார்கள் மற்றும் குவாண்டம் தொழில்நுட்பங்களில் வளர்ச்சிக்கு உதவும்.
ஆய்வகத்தில் வளர்க்கப்படும் வைரங்களுக்கான தேவை இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருவதால், உள்நாட்டிலேயே வைரங்களைத் தயாரிப்பது உள்நாட்டில் உற்பத்தியை அதிகரிக்கும் மற்றும் இறக்குமதியைச் சார்ந்திருப்பதைக் குறைக்கும்.
அமெரிக்கா, அவுஸ்திரேலியா, ஐரோப்பா போன்ற நாடுகள், இயற்கையாகக் கிடைக்கும் வைரத்தை, சுற்றுச்சூழலுக்கு ஆபத்தானது எனக்கூறி, ஆய்வுக் கூடங்களில் வளர்க்கப்படும் வைரத்தையே விரும்புகின்றனர்.
மேலும், இந்த வைரத்தை, ஆபரணங்கள் செய்ய பயன்படுத்துவதைத் தாண்டி, பல தொழிற்சாலைகளிலும், மின் சாதனங்களில் பயன்படுத்த முடியும் என்று ஆய்வாளர்கள் தெறிவிக்கின்றனர்.