ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களத்தை எப்படியாவது தங்களுக்கு சாதகமாக மாற்றிவிட வேண்டும் என்று அதிமுக கங்கணம் கட்டி கொண்டு செயல்பட்டு வருகிறது. கடந்த வாரம் வரை பல்வேறு கட்ட ஆலோசனைகளில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி தற்போது தீவிர வாக்கு சேகரிப்பில் குதித்துள்ளார். இனிமே சீரியஸ் மோடில் பிரச்சாரம் இருக்கும் என்கின்றனர் ரத்தத்தின் ரத்தங்கள்.
எடப்பாடி ஆக்ரோஷம்குறிப்பாக திமுக தரப்பில் ஷெட் போட்டு வாக்காளர்களை அடைத்து வைக்கும் விவகாரத்தை கையிலெடுத்து கொண்டு “நீங்கள் சரியான ஆம்பளையா இருந்தால் மீசை வச்ச ஆம்பளையா இருந்தால் சூடு, சொரணை, வெட்கம் மானம் இருந்தால் வாக்காளர்களை சந்திக்க அனுமதிக்க வேண்டும்” எனப் பொறிந்து தள்ளிவிட்டார். இந்த பேச்சு தான் ஈரோட்டில் ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வருகிறது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்அதுமட்டுமின்றி எடப்பாடியின் வியூகத்திலும் பெரிதும் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல்கட்டமாக காங்கிரஸ், அதிமுக இடையிலான வாக்கு சதவீத வித்தியாசத்தை பெரிய அளவில் குறைக்கவே திட்டமிட்டிருந்தனர். ஆனால் தற்போது கொஞ்சம் சிரமத்துடன் உழைத்தால் வெற்றி பெற வாய்ப்புகள் ஏற்படும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளதாம்.
எம்.ஜி.ஆர் திண்டுக்கல் வெற்றி1973ஆம் ஆண்டு திண்டுக்கல் மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் எம்.ஜி.ஆர் பெற்ற முதல் வெற்றியை போல ஈரோடு கிழக்கு தன்னுடைய அடையாளமாக மாற வேண்டும் என்று கருதுகிறார். இதற்காக கட்சி நிர்வாகிகளுக்கு தனிப்பட்ட முறையில் ஆலோசனைகள் வழங்கி கொண்டிருக்கிறார். மூத்த அமைச்சர்களுக்கு தனி அசைன்மென்ட்கள் அளிக்கப்பட்டுள்ளன.
அதிமுக ர.ர.,க்கள் மகிழ்ச்சிஇந்த சூழலில் வார்டுகளில் கட்சி நிர்வாகிகளின் செயல்பாடுகள் சற்று சுணக்கமாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. உடனே அவர்களை அழைத்து டோஸ் விட்டிருக்கிறார். அப்போது ஸ்வீட் பாக்ஸ் குமுறல்கள் வெளிப்பட உடனே சீக்ரெட் உத்தரவுகள் பறந்துள்ளன. தற்போது நிலைமை சுமூகமாக மாறி ரத்தத்தின் ரத்தங்களின் முகங்கள் புன்னகையால் சிவக்க தேர்தல் பணிகள் சற்றே வேகமெடுத்துள்ளதாம்.
தேர்தல் ஆணையத்தில் புகார்மறுபுறம் அனுமதி பெறாமல் இயங்கிய தேர்தல் பணிமனைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்து வருகின்றனர். இதில் திமுக கூட்டணி கட்சியினரின் தேர்தல் பணிமனைகளும் அடங்கும் என்பது தான் ஹைலைட். மேலும் ஆளுங்கட்சி சார்பில் பணத்தை தண்ணீர் போல் வாரி இறைப்பதாக அதிமுக தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இதுதொடர்பான பல்வேறு ஆதாரங்களுடன் மூத்த நிர்வாகிகள் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்து வருகின்றனர்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்போலி வாக்காளர்கள் விஷயத்தை சி.வி.சண்முகம் கையிலெடுக்க, பணப்பட்டுவாடா விவகாரத்தை ஜெயக்குமார் போட்டு உடைக்க ஈரோடு கிழக்கு களேபரமாக சென்று கொண்டிருக்கிறது. எனவே ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் போல ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலும் தள்ளி வைக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
திமுக அலர்ட்அதேசமயம் ஆளுங்கட்சிக்கு எதிரான புகார்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் அவர்கள் சற்றே பின் வாங்க நேரிடும். அந்த வாய்ப்பை நாம் சரியாக பயன்படுத்திக் கொண்டு மக்கள் மனங்களில் இடம்பிடிக்க வேண்டும் என்பது எடப்பாடி பழனிசாமியின் திட்டமாக இருக்கிறது.
தேர்தல் வியூகம்இன்னும் ஓராண்டில் மக்களவை தேர்தல் வரவுள்ளதால் இந்த இடைத்தேர்தல் முடிவுகளை பல்வேறு விதங்களில் சாதகமாக பயன்படுத்தி கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. அது அதிமுகவிற்கு உள்ளேயும் சரி. கூட்டணி விவகாரத்திலும் சரி. திமுகவிற்கு எதிரான போட்டியிலும் சரி என மூன்று விஷயங்களை சுட்டிக் காட்டுகின்றனர் ரத்தத்தின் ரத்தங்கள்.