வீடுகட்டும் திட்டத்தின் மானிய தொகை கிடைக்கவில்லை.. வாடகை வீடுகளில் சிரமத்துடன் வாழ்வதாக பயனாளிகள் புகார்…!

தென்காசி மாவட்டத்தில் அனைவருக்கும் வீடுகட்டும் திட்டத்தின் கீழ் பணி ஆணை கிடைத்து ஒரு வருட காலமாகியும் இதுவரை மானிய தொகை கிடைக்கவில்லை என பயனாளிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

தென்காசி மாவட்டம் திருவேங்கடம் பேரூராட்சிக்கு உட்பட்ட கீழேத்திருவேங்கடம்,ஆவுடையாள்புரம், செல்லபட்டி ஆகிய பகுதிகளில் பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டம்-சூரிய ஒளி மின்சக்தியுடன் கூடிய அனைவருக்கும் வீட்டு வசதி திட்டம் என்ற திட்டத்தின் பெயரில் சுமார் 32 வீடுகள் கட்டுவதற்க்கு அரசு சார்பில் மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

தற்போது வீடுகள் கட்டும் பணி 80 விழுக்காடு நிறைவடைந்த நிலையிலும் தங்களுக்கான மானிய தொகை கிடைக்க வில்லை என பயனாளிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.