அடுத்த மாதம் திருமணம்.. கடிதம் எழுதி வைத்துவிட்டு பெண் தற்கொலை.! போலீசார் விசாரணை.!

அடுத்த மாதம் திருமணம் நடக்க இருந்த நிலையில் கடிதம் எழுதி வைத்துவிட்டு பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை கிழக்கு தாம்பரம் அடுத்த சந்தோஷபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயந்தி(31). இவருக்கு அடுத்த மாதம் திருமணம் நடக்க இருந்தது. இந்நிலையில் பெற்றோர் திருமணம் அழைப்பிதழ் கொடுப்பதற்காக நேற்று முன்தினம் காலை வீட்டிலிருந்து இருந்து சென்றுள்ளனர். இதையடுத்து வீட்டில் தனியாக இருந்த ஜெயந்தி மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த சோலையூர் போலீசார் ஜெயந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் ஜெயந்தி எழுதிய கடிதம் ஒன்று சிக்கியது.

அந்த கடிதத்தில் தனது சாவுக்கு யாரும் காரணமில்லை என்று எழுதி இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் ஜெயந்தி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.