புதுச்சேரி: புதுச்சேரி அருகே விலை நிலங்களை அதிகரிக்கும் பன்றி தொல்லையை கட்டுப்படுத்த விவசாயிகள் புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளனர். ஒலிபெருக்கி மூலம் சத்தத்தை ஒலிக்க செய்து பன்றிகளை விரட்டும் நூதன முறை நல்ல பலனை கொடுத்து இருப்பதாக விவசாயிகள் கூறியுள்ளனர். புதுச்சேரி அடுத்த பாகூர் தெப்பெண்ணை ஆற்றின் கரை அருகே சொரியாங்குப்பம், குருவி நத்தம், மணமேடு பகுதியில் நெல், கரும்பு, கிழங்கு மற்றும் காய்கறிகள் பயிரிடப்பட்டுள்ள.
இரவு நேரங்களில் ஆற்று ஓரத்தில் இருந்து ஓடை வழியாக ஊடுருவி விலை நிலங்களை பன்றிகள் சேதப்படுத்தி வந்தனர். பன்றிகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பயிர்களை காப்பாற்ற தினந்தோறும் இரவு முழுவதும் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. மேலும், பன்றிகள் வருவதை தடுப்பதற்காக எடுக்கப்பட்ட வேலி, மருந்து தெளித்தல் போன்ற நடவடிக்கைகள் போதிய பலன் அளிக்கவில்லை என விவசாயிகள் கவலையடைந்தனர். இந்த நிலையில் பிள்ளையார் குப்பத்தை சேர்ந்த விவசாயி உமாசங்கர் என்பவர் கூகுள் உதவியுடன் தனது நிலத்தில் பன்றிகள் புகாதவாறு நடவடிக்கை எடுத்திருக்கிறார்.
பன்றிகளை பயம்புறுத்தும் வகையில் நிலத்தை சுற்றி ஒலிபெருக்கி அமைத்து அதனுள் Pen drive பொருத்தி பேருந்து சைரன், நாய், சிங்கம், புலி, யானை போன்ற விலங்குகளின் சத்தங்கள், பறை இசையென பலவிதங்களில் ஒலிக்க விடுகிறார். இரவு 6 முதல் காலை 6 மணி வரை பன்றிங்களை விரட்டும் இந்த நூதன முறையால் பயிர்சேதம் 90% வரை குறைந்துள்ளதாக விவசாயிகள் கூறியுள்ளனர். ஒலிபெருக்கி மூலம் பன்றிகளை விரட்ட விவசாயி உமாசங்கர் எடுத்துள்ள இந்த முயற்சியை மற்ற விவசாயிகளும் பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர்.