வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: இந்திய கிரிக்கெட் போர்டின் தேர்வுக்குழு தலைவர் சேட்டன் சர்மா, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்
இந்திய அணி கிரிக்கெட் அணி வாரிய தலைவர் சேட்டன் சர்மா. கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த ‘டி-20’ உலக கோப்பையில் இந்திய அணி அரையிறுதியுடன் திரும்பியது. இதனையடுத்து, சேட்டன் சர்மா தலைமையிலான தேர்வுக்குழு கலைக்கப்பட்டது. புதிய தேர்வுக்குழுவை நியமிக்க விளம்பரம் செய்யப்பட்டது. அதில், சேட்டன் சர்மா விண்ணப்பிக்க அவரை மீண்டும் தலைவராக பிசிசிஐ நியமித்தது.
இந்நிலையில், ஒரு டிவி சேனல் ஒன்று ரகசிய கேமரா வைத்து நடத்திய புலனாய்வில், சேத்தன் சர்மா பல்வித அதிர்ச்சிகர தகவல்களை கூறியுள்ளார்.
விராட் கோஹ்லி – ரோகித் சர்மா இடையிலான ஈகோ பிரச்னை, கோஹ்லி கேப்டன் பதவி விவகாரம், கங்குலி, மற்றும் வீரர்களின் உடல் தகுதி குறித்து பல தகவல்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இது கிரிக்கெட் அரங்கில் பல வித அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து சேட்டன் சர்மாவை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்தன.
இந்நிலையில், பிசிசிஐ தேர்வுக்குழு தலைவர் பதவியில் இருந்து சேட்டன் சர்மா விலகியுள்ளார். இதற்கான கடிதத்தை, பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷாவிற்கு அனுப்பி வைத்தார். அந்த கடிதத்தை ஜெய்ஷா ஏற்றுக்கொண்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement