உதகை: பேருந்தில் டிக்கெட் வாங்கவில்லை என ரூ.500 அபராதம்; பரிசோதகர் மனஉளைச்சல் ஏற்படுத்தியதற்காக ரூ.25,000 நஷ்டஈடு வழங்க ஆணை

நீலகிரி: உதகையில் அரசு பேருந்தில் டிக்கெட் வாங்கவில்லை என ரூ.500 அபராதம் வசூலித்த வழக்கில் பாதிக்கப்பட்ட பயணிக்கு ரூ.25,000 நஷ்டஈடு வழங்க நீலகிரி மாவட்ட நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. உதகையை சேர்த்த ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் சேகர் கடந்த ஆண்டு கோவையில் இருந்து அரசு பேருந்தில் உதகைக்கு வந்துள்ளார். பேருந்து சேரிங் கிராஸ் பகுதியில் வந்த போது டிக்கெட் பரிசோதகர் பயணிகளிடம் டிக்கெட் வாங்கி சோதனை செய்துள்ளார்.

சேகர் தனது டிக்கெட்டை தேடி எடுக்க தாமதமானதாக தெரிகிறது. இதையடுத்து அவர் டிக்கெட் வாங்கவில்லை என ரூ.500 அபராதம் விதித்த பரிசோதகர் சேகரை தரக்குறைவாக பேசியுள்ளார். மனஉளைச்சல் அடைந்த சேகர் உதகை மாவட்டம் நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த ஆணையம் சேகரிடம் வசூலித்த ரூ.500-யும் சேர்த்து ரூ.25,000 நஷ்டஈடாக வழங்க உத்தரவிட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.