Mahashivratri 2023: ஏழு மலைகளை தாண்டி… வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசிக்க அனுமதி

Maha Shivratri 2023: இந்து மதத்தின் முக்கிய கடவுளில் ஒருவராக கருதப்படும் சிவபெருமானுக்கு உகந்த நாளாக மகாசிவராத்திரி தினம் கருதப்படுகிறது. மகாசிவராத்திரியை நாடு முழுவதும் உள்ள சிவாலயங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். மக்கள் விரதம் இருந்து, இரவு முழுவதும் தூக்கம்முழித்து, பூஜைகளை மேற்கொள்வார்கள். 

திருமணமான பெண்கள் மணவாழ்க்கை சிறக்கவும், திருமணமாகாத பெண்கள் சிவபெருமானை போன்று ஆண்மகன் கணவனாக அமைய வேண்டியும் மகாசிவராத்திரி அன்று விரதம் இருப்பார்கள் என கூறப்படுகிறது. இந்தியா முழுவதும் இப்பண்டிகை பரவலாக கொண்டாடப்படும் நிலையில், தமிழ்நாட்டிலும் பல்வறு சிவாலாயங்களில் பூஜைகள் நடைபெறும். இந்தாண்டு மகாசிவராத்திரி நாளை கடைபிடிக்கப்பட உள்ளதால், பல கோயில்கள் பூஜைகளுக்கான முன்னேற்பாடு பணிகள் தொடங்கிவிட்டன.

அந்த வகையில், கோவை மாவட்டம் போலுவாம்பட்டி வன சரகத்துக்கு உட்பட்ட பூண்டி அடிவாரத்தில் புகழ்பெற்ற வெள்ளிங்கிரி ஆண்டவர் திருக்கோயில் உள்ளது. அந்த கோயிலில் இருந்து சுமார் ஏழு கிலோமீட்டர் தொலைவில் ஏழு மலைகளையும் தாண்டி சுயம்பு லிங்கமாக இருப்பவர், வெள்ளிங்கிரி ஆண்டவர். 

அது ஏழு மலைகள் அடர்ந்த வனப்பகுதியை சேர்ந்ததாகும். இங்கு வனவிலங்கு அதிகமாக உள்ள காரணத்தால் பக்தர்களுக்கு அனுமதி அளிப்பதில்லை. சாமி தரிசனம் செய்ய பிப்ரவரி மாதம் முதலில் இருந்து மே மாதம் இறுதி வரை இந்த கோடை காலங்களில் வனத்துறை பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் விலக்கப்பட்டுள்ள நிலையில் ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக கோயிலுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக கோயில் நிர்வாகம் பல்வேறு முன்னேற்பாடுகளை செய்துள்ளது. தண்ணீர் வசதி மற்றும் முகாம் உட்பட ஏராளமான வசதிகள் இந்திய சமய அறநிலையத்துறை சார்பாக செய்யப்பட்டுள்ளது.

கழிப்பிட வசதி பெண்களுக்கு தனியாகவும் ஆண்களுக்கு தனியாகவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுமார் 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் இங்கு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மலையேற வனத்துறை சார்பாக ரூபாய் 30 ரூபாய்க்கு கைத்தடிகள் இங்கு விற்கப்படுகிறது. 

பிளாஸ்டிக் பொருட்களை வனப்பகுதிகளில் கொண்டு செல்வதை தடுக்க பிளாஸ்டிக் பாட்டில் ஒன்றுக்கு, 20 ரூபாய் கொடுத்து டோக்கனை பெற்றுக் கொள்ளலாம். மலை ஏறிய பின்பு வெளியே வந்தவுடன் டோக்கனை கொடுத்து 20 ரூபாயை பெற்றுக்கொள்ளலாம் இந்த முயற்சி வனத்துறை எடுத்துள்ளது ஏனென்றால் வனப்பகுதியில் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு செல்லக்கூடாது என்பது அரசின் விதியாக உள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.