மதுரை: மதுரை கல்யாண கருப்பசாமி கோவிலில் சிவராத்திரி பூஜைக்கான உண்டியலை சீல் வைத்து பாதுகாக்க வேண்டு என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. உசிலம்பட்டியை சேர்ந்த மலைக்கள்ளன் என்பவர் தொடர்ந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்துள்ளது. சிவராத்திரி பூஜைக்காக உண்டியல் காணிக்கை வசூலிப்பதில் கையாடல் நடக்க வாய்ப்புள்ளதாக மனுதாரர் புகார் தெரிவித்திருந்தார்.