டெல்லி: 49வது ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் நாளை டெல்லியில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில், வரி ஏய்ப்பை தடுப்பது குறித்து முடிவு எடுக்கப்பட உள்ளதாக தெரிகிறது. ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறையில் தேவைப்படும் மாற்றங்கள் குறித்து ஆலோசிக்க ஜி.எஸ்.டி., கவுன்சில் அமைக்கப்பட்டு, இதற்கான கூட்டம் குறிப்பிட்ட கால இடைவெளியில் கூடி விவாதித்து வருகிறது. இதுவரை 48முறை ஜிஎஸ்டி கவுன்சில் கூடி விவாதித்து பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ள நிலையில், 49வது ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம், […]