dhanush about vaathi: வெங்கி அட்லூரி கதை சொன்னதுமே தனுஷ் ஓகே சொன்னது ஏனென்று அப்போ புரியல இப்போ தான் புரியது என்கிறார்கள் ரசிகர்கள்.
வாத்திவெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் கணக்கு வாத்தியாராக நடித்த வாத்தி படம் இன்று தியேட்டர்களில் ரிலீஸாகியிருக்கிறது. அந்த படம் தெலுங்கில் சார் என்கிற பெயரில் வெளியாகியுள்ளது. இது தான் தனுஷ் நடிப்பில் வெளியாகியிருக்கும் முதல் தெலுங்கு படம் ஆகும். வாத்திக்கு மட்டும் அல்ல சாருக்கும் ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்து வருகிறார்கள்.
வாத்தி விமர்சனம்
தனுஷ்வாத்தி படம் ரிலீஸாவதற்கு முன்பு பெரிதாக பில்ட்அப் கொடுக்கவில்லை. அது தான் படத்திற்கு பெரிய பலமாக அமைந்திருக்கிறது என்கிறார்கள் படம் பார்த்தவர்கள். வாத்தி படத்தில் கணக்கு வாத்தியார் பாலாவாகவே வாழ்ந்திருக்கிறார் தனுஷ் என விமர்சனம் எழுந்துள்ளது. ஆனால் தனுஷ் எந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டாலும் அந்த கதாபாத்திரமாகவே மாறிவிடுவார் என்பது அனைவருக்கும் தெரியும். அது தான் தனுஷின் ஸ்பெஷல்.
வெங்கி அட்லூரிலாக்டவுன் நேரத்தில் தான் தனுஷிடம் வாத்தி படத்தின் கதையை சொல்லியிருக்கிறார் வெங்கி அட்லூரி. நடிக்க முடியாது என்று சொல்லிவிடலாம் என்கிற மனநிலையில் இருந்திருக்கிறார் தனுஷ். ஆனால் வெங்கி அட்லூரி சொன்ன கதையை கேட்டதுமே இம்பிரஸாகி, நான் நடிக்கிறேன் சார் என தெரிவித்திருக்கிறார். மறுபேச்சு பேசாமல், எத்தனை நாட்கள் டேட்ஸ் வேண்டும் என்று சொல்லுங்கள் வெங்கிகாரு என கேட்டிருக்கிறார் தனுஷ்.
Dhanush: வேலையில்லாமல் மன உளைச்சல்: பாவம், தனுஷுக்கே இப்படி ஒரு நிலைமையா!
கதைஒரு தெலுங்கு இயக்குநர் சொன்ன கதையை கேட்டு தனுஷ் இந்த அளவுக்கு இம்பிரஸ்ஸாகிவிட்டார் என்றால் கதை பயங்கரமாக இருக்கும் போன்று. ஆனாலும் வம்சி பைடிபல்லி எடுத்த வாரிசு போன்று சீரியல் கதையாக இருந்துவிடுமோ என்கிற பயம் இல்லாமல் இல்லை என தனுஷ் ரசிகர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் தான் வாத்தி படத்தை இன்று தியேட்டரில் பார்த்துவிட்டு இது கண்டிப்பாக சீரியல் கதை இல்லை. மாஸ் கதையை சத்தமில்லாமல் படமாக்கி வெளியிட்டுள்ளார்கள் என்கிறார்கள் ரசிகர்கள்.
புரியுதுபடத்தை பார்த்த பிறகே வெங்கி அட்லூரிக்கு தனுஷ் ஏன் உடனே சம்மதம் தெரிவித்தார் என்பது தெரிகிறது. நீங்கள் பேட்டியில் வெங்கி அட்லூரி பற்றி சொன்னபோது புரியவில்லை ஆனால் தற்போது தான் தெளிவாக புரிகிறது என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். வாத்தி கதை ஒன்றும் புதிது இல்லை. ஆனால் அதை வெங்கி அட்லூரி படமாக்கிய விதம் தான் புதிது. அதற்காக தான் வாத்தியை எங்களுக்கு பிடித்திருக்கிறது என்கிறார்கள் படம் பார்த்தவர்கள்.
ஹிட்திருச்சிற்றம்பலத்தை அடுத்து வாத்தி படம் தனுஷுக்கு கைகொடுத்துவிட்டது. தனுஷ் நடிப்பில் வெளியான முதல் தெலுங்கு படமே அவருக்கு பெயரும், புகழும் வாங்கிக் கொடுத்துள்ளது. சார் படத்தை பார்த்த அக்கட தேசத்து சினிமா ரசிகர்களோ, தனுஷ்காரு சூப்பர் என விமர்சித்துள்ளனர். தனுஷ், சம்யுக்தா இடையேயான கெமிஸ்ட்ரி ரசிகர்களை கவர்ந்துவிட்டது.