மதுரை: தமிழ்நாட்டில் மதுரை மாவட்டம், ஆரியப்பட்டி என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும். இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இக்கோயிலில் கல்யாண கருப்பசாமி பெருமாள் சன்னதி உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
வழக்கு நிலுவையில் இருப்பதால் நடைமுறை நிருவாகியால் நிர்வகிக்கப்படுகிறது. இந்நிலையில் மதுரை கல்யாண கருப்பசாமி கோயிலில் சிவராத்திரி பூஜைக்கான உண்டியலை சீல் வைத்து பாதுகாக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உசிலம்பட்டியை சேர்ந்த மலைக்கள்ளன் என்பவர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
சிவராத்திரி பூஜைக்காக உண்டியல் காணிக்கை வசூலிப்பதில் கையாடல் நடக்க வாய்ப்புள்ளதாக மனுதாரர் புகார் அளித்த நிலையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மனுதாரர் கூறும் குற்றச்சாட்டு கடுமையானதாக உள்ளது என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி கருத்து தெரிவித்தார். வசூல் முடிந்து கோயில் உண்டியலை சீல் வைத்து பாதுகாக்க வருவாய் கோட்டாட்சியருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.