4மாணவிகள் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த விவகாரம்.. பெற்றோரின் காலில் விழுந்து மன்னிப்பு கோரிய ஆசிரியை.!

கடந்த 2 நாட்களுக்கு முன்பு கரூர் மாவட்டம், மாயனூர் கதவனை அருகே ஆற்றில் மூழ்கிய ஒரு மாணவியை காப்பாற்ற முயன்ற போது, மூன்று மாணவிகள் நீரில் மூழ்கி, 4 மாணவிகளும் மூச்சு திணறி பலியாகினர்.

தமிழரசி, சோபியா, இனியா, லாவண்யா ஆகிய நான்கு மாணவிகளின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். திருச்சியில் நடைபெற்ற விளையாட்டு போட்டிக்காக அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அடுத்த பிலிப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளி சேர்ந்த இந்த நான்கு மாணவிகளும் நேரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

சம்பவ இடத்தில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில், “இந்த பகுதி பொதுமக்களுக்கு தடை செய்யப்பட்ட பகுதி. இதற்கான அறிவிப்பும் வைக்கப்பட்ட நிலையில், அதையும் மீறி மாணவிகள் இங்கு குளிக்க வந்ததால் இந்த துயரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது” என்று மாவட்ட ஆட்சியர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கரூர் மாயனூர் காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த நான்கு மாணவிகளையும் பாதுகாப்பாக அழைத்து செல்ல தவறிய காரணத்தால் சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியரான பொட்டுமணி, இடைநிலை ஆசிரியர் ஜெபசாய இப்ராஹிம் மற்றும் ஆசிரியர் திலகவதி ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த நிலையில், ஆற்றுக்கு அழைத்துச் சென்ற ஆசிரியர் கைது செய்துள்ளனர்.

இதனையடுத்து 4 மாணவிகள் ஆற்றில் மூழ்கி இறந்த  பிலிப்பட்டி அரசு நடுநிலைப் பள்ளிக்கு கடந்த சனிக்கிழமை வரை விடுமுறை அறிவிக்கப்பட்டு இன்று வழக்கம்போல் பள்ளி திறக்கப்பட்டது.

இந்த நிலையில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த மாணவி தமிழரசியின் தந்தை ராஜ்குமார் காலில் விழுந்து உதவி தலைமை ஆசிரியை பரிமளா மன்னிப்பு கோரினார். மகள் இறப்பு சான்றிதழ் கூட வழங்காத நிலையில் எதற்காக பள்ளியை திறந்தீர்கள் என பெற்றோர்கள் ஆசிரியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.