நிலக்கரி சுரங்க ஊழல்: சத்தீஸ்கரில் காங்., நிர்வாகிகள் வீட்டில் அமலாக்கத்துறை ‛சல்லடை| Coal Mining Scam: Enforcement Directorate Sieves in Chhattisgarh Cong, Executives House

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

ராய்பூர்: நிலக்கரி சுரங்க முறைகேடு தொடர்பாக, சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் பலரது வீடுகளில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

latest tamil news

சத்தீஸ்கரில் முதல்வர் பூபேஷ் பாகேல் தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. கடந்த 2020ல் வருமான வரித் துறை நிலக்கரி சுரங்க ஊழல் தொடர்பாக, மாநிலத்தின் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் சிலர் மீது வழக்கு பதிவு செய்தது.

இது தொடர்பாக சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் பலரது வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது ராய்பூரில் உள்ள காங்., எம்எல்ஏ தேவேந்திர யாதவ் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.

latest tamil news

காங்., நிர்வாகிகள் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது குறித்து, சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் பா.ஜ., மீது கடுமையாக சாடியுள்ளார். மேலும் அவர் கூறுகையில்: பாரத் ஜோடோ யாத்ராவில் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது. அதானியின் உண்மை அம்பலப்படுத்தப்பட்டதால் பா.ஜ., விரக்தியடைந்துள்ளது. கவனத்தை திசை திருப்பும் முயற்சி இது.

ராய்ப்பூரில் 4 நாட்களுக்குப் பிறகு காங்கிரஸ் மாநாடு உள்ளது. ஆயத்தப் பணிகளில் ஈடுபடும் மக்களைத் தடுத்து நிறுத்துவதன் மூலம் எங்கள் மனதைக் குலைக்க முடியாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.