கோவை: மருத்துவ துறையில் நவீன மாற்றங்கள் மனித குலத்திற்கு பயனளிக்கிறது என ரோபோடிக் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை அறிமுக விழாவில் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு கூறினார். மருத்துவ துறையில் குறிப்பாக அறுவை சிகிச்சைகளில் நவீன ரோபோட்டிக் சிகிச்சை முறை தவிர்க்கமுடியாத இடத்தை பிடித்து வருகிறது. அந்த வகையில் மூட்டு மாற்று சிகிச்சை முறையில் ரோபோட்டிக் சிஸ்டத்தை கோவை ரெக்ஸ் மருத்துவமனை அறிமுகம் செய்துள்ளது. இதற்கான அறிமுக விழா மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு […]