அரச பாடசாலைகளுக்கு நாலாயிரத்து 800 அதிபர்களை நியமிக்க கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது.
இதற்கு அரச சேவை ஆணைக்குழுவின் அனுமதி கிடைத்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
வெற்றிடங்களுக்கு விண்ணப்பித்த 10 ஆயிரம் பேர் நேர்முக பரீட்சை;க்கு அழைக்கப்படவுள்ளனர்..
எதிர்வரும் நாட்களில் நேர்முகத் தேர்வுகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மாதத்தில் ஆட்சேர்ப்பு நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஏ தரம் மற்றும் மாகாணப் பாடசாலைகளில் உள்ள வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.