வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஆமதாபாத்: குஜராத் பால விபத்து குறித்து சிறப்பு விசாரணை குழு அளித்த தகவலின் படி, பாலம் விபத்து ஏற்படுவதற்கு முன்பே 49ல் 22 கம்பிகள் அறுந்திருந்தது அம்பலமாகியுள்ளது.
குஜராத்தில் மோர்பி நகரின் மச்சுச்சூ ஆற்றின் மேல், ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட தொங்கு பாலம் இருந்தது. இது, கடந்த ஆண்டு அக்., 30ல் அறுந்து விழுந்தது. இந்த விபத்தில் 135 பேர் உயிரிழந்தனர். இது குறித்து சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது.
இந்த பாலத்தை இயக்கி பராமரித்து வந்த, ‘ஒரேவா’ குழுமத்தைச் சேர்ந்த ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர். விபத்து நடந்து மூன்று மாதங்கள் கடந்துள்ள நிலையில், சிறப்பு விசாரணைக்குழு சார்பில், நீதிமன்றத்தில் சில தினங்களுக்கு முன் 1,262 பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
.
இது குறித்து சிறப்பு விசாரணைக்குழு அளித்த அறிக்கை: நாட்டின் பல ஆண்டுகள் பழமைவாய்ந்த பாலத்தின் நிலையை மேம்படுத்துவதிலும், அதில் வரும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும் கவனக்குறைவு இருந்துள்ளது.
தொங்கு பாலத்தை தாங்கிக் கொண்டிருந்த 49 கம்பிகளில் கிட்டத்தட்ட 22 கம்பிகள் பாலம் அறுந்து விழுவதற்கு முன்பே பாதி அறுந்தநிலையில் தான் இருந்திருக்கிறது. சம்பவ இடத்தில் நேரடியாக ஆய்வு செய்த போது இதற்கான தடயங்கள் கிடைத்துள்ளன.
மீதமிருந்த 27 இரும்புக்கயிறுகள்தான் விபத்தின்போது அறுந்துள்ளன. பாலத்தில் பயணிகளுக்கான கட்டணத்தை உயர்த்தவும், பாலத்தை திறக்கவும் அதனை மேம்படுத்த ஒப்பந்தம் மேற்கொண்ட நிறுவனம் நகராட்சியிடம் அனுமதி கோர வில்லை. நகராட்சியும் பாலத்தின் திறப்பு குறித்து எந்த அனுமதியும் வழங்கவில்லை. இரு தரப்பினரும் கவனக்குறைவுடன் இருந்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement