கர்நாடக பெண் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் மோதல்: மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைப்பதால் பரபரப்பு

கர்நாடகா: கர்நாடகாவில் ஐ.ஏ.எஸ் அதிகாரி ரோகினி சிந்தூரியின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டு ஐ.பி.எஸ் அதிகாரி ரூபா கூறியுள்ள குற்றச்சாட்டுகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. மறைந்த ஜெயலலிதா தோழி சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்த போது அவருக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டதாக கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியர்வர் ரூபா. தற்போது கர்நாடக கைவினை பொருட்கள் வளர்ச்சி கழகத்தின் நிர்வாக இயக்குனரான இருக்கும் இவர் அறநிலையத்துறை ஆணையராக உள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரி ரோகிணி சிந்தூரி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முவைத்துள்ளார். சக ஆண் அதிகாரியுடன் ரோகிணி சிந்தூரி நெருக்கமாக இருப்பதாகவும், பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

குறிப்பாக, மதசார்பற்ற ஜனதா தள எம்.எல்.ஏ. மகேஷை உணவகம் ஒன்றில் ரோகிணி சந்தித்து சமாதானம் பேசியது தொடர்பான புகைப்படத்தை வெளியிட்டு ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு சமாதான பேச்சுவார்த்தை ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார். அத்துடன் 3 ஆண் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு ரோகிணி அனுப்பும் படங்கள் என்று கூறி அவரது தனிப்பட்ட படங்கள் சிலவற்றையும் ரூபா வெளியிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோளாறில் பணியில் இருந்தபோது தற்கொலை செய்து கொண்ட ஐ.ஏ.எஸ் அதிகாரி ரவியின் குடும்பத்தில் பிரச்சனை ஏற்படவும் ரோகிணியே காரணம் என்பது உட்பட 19 குற்றச்சாட்டுகளை ரோகிணி மீது ரூபா அடிக்கியுள்ளார்.

இந்த குற்றச்சாட்டுகள் மீது விசாரணை நடத்தவும் அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த விவகாரம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் ரூபாவின் குற்றச்சாட்டுகளை ரோகிணி திட்டவட்டமாக மறுத்துள்ளார். சிலரது மனரீதியான பாதிப்புக்கு சிகிச்சை தேவைப்படுவதாக ரூபாவை விமர்சித்துள்ள ரோகிணி ரூபா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஏற்கனவே மைசூரில் பணிபுரிந்த போது ஐ.ஏ.எஸ் அதிகாரிகளான ரோகிணி சிந்தூரி மற்றும் ஷில்பானவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு இருவரும் பணியிடை மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.