Mayilsamy: அன்பே கடவுள் இல்லத்தில் இருந்து விடைபெற்றார் மயில்சாமி.. உடல் தகனம்.. கதறி அழுத மகன்கள்!

தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் நடிகர் மயில்சாமி. நேற்று முன்தினம் இரவு கேளம்பாக்கம் மேகநாதீஸ்வரர் கோவிலில் விடிய விடிய மகா சிவராத்திரி வழிபாடு செய்தார். இந்நிலையில் அதிகாலை வீடு திரும்பிய அவர் காலை 3.30 மணி அளவில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். 57 வயதாகும் மயில்சாமி 200 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

கமலின் அபூர்வ சகோதரர்கள், ரஜினியின் பணக்காரன், உழைப்பாளி உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். மயில்சாமியின் திடீர் மரணம் தமிழ் சினிமா பிரபலங்களை உலுக்கியுள்ளது. நடிகர்கள் பலரும் மயில்சாமியின் உடலுக்கு திரையுலகினர், அரசியல் பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில் நடிகர் மயில்சாமியின் இறுதி ஊர்வலம் இன்று நடைபெற்றது. மயில்சாமி உடலுக்கு சிவ வாத்தியங்கள் முழங்க இறுதி மாரியாதை செலுத்தப்பட்டது. சாலிகிராமத்தில் உள்ள மயில்சாமியின் அன்பே கடவுள் இல்லத்தில் இருந்து அவரது உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. அப்போது வழி நெடுகிலும் நூற்றுக்கணக்கான மக்கள் பங்கேற்ற கண்ணீர் மல்க வழி அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் வடபழனியில் உள்ள ஏ.வி.எம் மின் மயானத்திற்கு சென்றடைந்த மயில்சாமியின் உடலுக்கு குடும்ப வழக்கப்படி அவரது மகன்கள் இறுதி சடங்கு செய்தனர். அதன் பின்னர் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. தந்தையின் உடலை தகனம் செய்த மயில்சாமியின் மகன்கள் கதறி அழுத காண்போரை கலங்க செய்தது. இறுதிச்சடங்கில் மயில்சாமியின் உறவினர்கள், துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, நடிகர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் பங்கேற்று கண்ணீர்மல்க அவருக்கு பிரியாவிடை கொடுத்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.