பாகிஸ்தான் எல்லை பகுதியை மூடிய தாலிபான்… சிக்கலில் பாகிஸ்தான்!

ஆப்கானிஸ்தான் தலிபான் – பாகிஸ்தான் உறவுகள்: தற்போது பாகிஸ்தான் பல கடுமையான பிரச்சனைகளால் தவித்து வருகிறது. ஒரு புறம்  பொருளாதார நெருக்கடி அதற்கு சவாலாக இருந்து வரும் நிலையில், மறு புறம் தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP) தொடர்ந்து பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி வருகிறது. இவை அனைத்திற்கும் மத்தியில், ஆப்கானிஸ்தான் தலிபான்களுடனான உறவு மோசமடைந்து வருவதும் பாகிஸ்தானுக்கு ஒரு பெரிய பிரச்சனையாக உள்ளது. தாலிபான்கள் காபூல் கைப்பற்றப்பட்டதில் இருந்து, ஆப்கானிஸ்தான் தலிபான்களுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மோதல் அதிகரித்து வருகிறது.

ஆப்கானிஸ்தான் தலிபான் அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தானுடனான முக்கிய வர்த்தக மற்றும் எல்லைக் கடக்கும் புள்ளிகளில் ஒன்றை மூடியதாக இப்போது செய்தி வெளியாகியுள்ளது. இஸ்லாமாபாத் அதன் வாக்குறுதிகளை மீறுவதாக ஆப்காணிஸ்தான் குற்றம் சாட்டுகிறது. ‘தி டான்’ வெளியிட்டுள்ள செய்தியில், ஆப்கானிஸ்தான் தலிபான் ஆணையர் டோர்காம், பயணம் மற்றும் போக்குவரத்து வர்த்தகத்திற்காக பயன்படுத்தப்பட்ட எல்லைப் பகுதி ஒன்று  மூடப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

டோர்காமில் உள்ள தலிபான் ஆணையர் மௌல்வி முகமது சித்திக், “பாகிஸ்தான் அதன் வாக்குறுதிகளை பின்பற்றவில்லை, எனவே  எங்களது தலைமையின் அறிவுறுத்தலின் பேரில் எல்லை பகுதியின் நுழைவு வாயில் மூடப்பட்டுள்ளது” என்று ட்வீட் செய்த அவர், கிழக்கு நங்கர்ஹார் மாகாணத்தில் எல்லை தாண்டிய பயணத்தை தவிர்க்குமாறு ஆப்கானிஸ்தான் மக்களுக்கு அறிவுறுத்தினார். 

பாகிஸ்தான் மீது அதிருப்தியில் இருக்கும் தாலிபான்

ஆப்கானிஸ்தான் தலிபான்கள் பாகிஸ்தான் மீது கோபம் கொண்டுள்ளனர். இருப்பினும், இஸ்லாமாபாத் எந்த உறுதிமொழியை மீறியதாக தலிபான் அதிகாரி குறிப்பிடவில்லை என்றும், சில உறுதிப்படுத்தப்படாத ஊடக அறிக்கைகள், பாகிஸ்தானில் சிகிச்சை பெற ஆப்கானிஸ்தான் நோயாளிகள்  மேற்கொள்ளும் பயணத்திற்கு அறிவிக்கப்படாத தடை உள்ளதால் தலிபான்கள் கோபமடைந்ததாகக் கூறுகின்றன.

மேலும் படிக்க | பாகிஸ்தான் கராச்சி காவல்துறை தலைமையகம் மீது பயங்கரவாத தாக்குதல்!

பாகிஸ்தான் –  தலிபான்களுக்கு இடையே பதற்றம்

பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தான் தலிபான்களுக்கும் இடையேயான உறவில் பதற்றம் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி சனிக்கிழமை கூறுகையில், ஆப்கானிஸ்தான் இடைக்கால அரசு, தனது எல்லையில் இருந்து செயல்படும் பயங்கரவாத குழுக்களை ஒடுக்குவதற்கான  “விருப்பத்தையும் திறனையும்” வெளிப்படுத்தவில்லை என்றால், பாகிஸ்தானில் பெரும் அழிவை ஏற்படுர்த்தி வரும் பயங்கரவாதத்தை ஒழிக்க அதிக காலம் எடுக்காது என தெரிவித்தார். ஜெர்மனியில் முனிச் பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | பாகிஸ்தானில் மத நிந்தனை குற்றத்திற்காக கொடூரமாக கொலை செய்யப்பட்ட 20 வயது இளைஞர்!

 

மேலும் படிக்க | 5,000 ஆண்டுகள் பழமையான ஹோட்டலை கண்டுபிடித்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்!

மேலும் படிக்க | எகிப்தின் 4300 ஆண்டு பழமையான தங்க மூலாம் பூசப்பட்ட மம்மி கண்டுபிடிப்பு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.