2020 ஆண்டு கொலை மற்றும் கடத்தல் போன்ற தொடர்ச்சியான குற்றங்களுக்காக கைது செய்யப்பட்ட பீட்டர் மன்ஃப்ரெடோனியா என்ற நபருக்கு 55 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தொடர் குற்றங்கள்
கடந்த 2020 ஆண்டு பீட்டர் மன்ஃப்ரெடோனியா (Peter Manfredonia) என்ற நபர் அவருடைய முன்னாள் வகுப்பு தோழரை சுட்டுக் கொன்றதுடன் அவரது காதலியை கடத்தி சென்றதாக சுமத்தப்பட்ட குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார்.
அத்துடன் இந்த கொலை மற்றும் கடத்தல் சம்பவத்திற்கு முன்பு பீட்டர் மன்ஃப்ரெடோனியா(26) இரண்டு பேரை வாளால் தாக்கியுள்ளார், அவர்களில் ஒருவரை சாமுராய் வாளால் வெட்டிக் கொன்றதுடன் மற்றொரு நபரை ஆழ்ந்த காயத்திற்கு உள்ளாக்கியுள்ளார்.
Zoonar
இதையடுத்து பல மாகாணங்களில் ஆறு நாள் வரை தேடுதல் வேட்டை நடத்திய பொலிஸார், வன்முறை குற்றச்செயல்களில் ஈடுபட்டு இருந்த பீட்டர் மன்ஃப்ரெடோனியா அமெரிக்காவின் மேரிலாந்து பகுதியில் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.
அதை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையிலும் மான்ஃப்ரெடோனியா சாமுராய் வாளால் எதற்காக இருவரை தாக்கினார் என்பது நிறுவப்படவில்லை.
55 ஆண்டுகள் சிறை
பீட்டர் மன்ஃப்ரெடோனியா மனநிலப் பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்ததாகவும், தொற்று நோய் பரவல் காரணமாக அவரால் சிகிச்சை பெற முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Shutterstock
மன்ஃப்ரெடோனியா கொலை மற்றும் கடத்தல் போன்ற அனைத்து குற்றங்களையும் ஒப்புக் கொண்ட நிலையில், அவர் 55 ஆண்டு சிறைத்தண்டனையும் ஏற்க ஒப்புக்கொண்டார்.
மன்ஃப்ரெடோனியாவுக்கு ஏப்ரல் மாதம் தண்டனை விதிக்கப்படும் என்றும், தண்டனை விதிக்கப்படும் போது மன்ஃப்ரெடோனியா அறிக்கை வெளியிடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Shutterstock