சிவ சேனா சின்னம் எங்களுக்குத்தான்- உத்தவ் தாக்கரே வைத்த அடுத்த அடி!

1966 ஆம் ஆண்டு பால் தாக்கரேவால் தொடங்கப்பட்ட சிவ சேனா கட்சி, அவரது மறைவிற்கு பிறகு பால் தாக்கரேவின் மகன் உத்தவ் தாக்கரே வசம் வந்தது. 2019 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக உடன் இணைந்து சிவ சேனா தேர்தலை சந்தித்தது. இதில் சிவ சேனாவை விட பாஜக அதிக இடங்களை கைப்பற்றியது.

இதனால் முதல்வர் பதவி யாருக்கு என்பதில் இரு கட்சிகளுக்கும் இடையே ஏற்பட்டது. முதல்வர் பதவி தனக்கு வேண்டும் என்பதற்காக சிவ சேனா தனது சித்தாந்தத்திற்கு எதிராக உள்ள காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து ஆட்சியை கைப்பற்றியது. உத்தவ் தாக்கரே முதல்வராகவும் ஆனார்.

இந்த சம்பவத்தால் அதிருப்தியில் இருந்த சிவ சேனாவின் ஒரு பிரிவினர், ஏக்நாத் ஷிண்டே தலைமையில் தனி அணியாக பிரிந்து சென்றனர். மகாராஷ்டிராவின் மக்களுக்கு முன்னுரிமை மற்றும் தீவிர இந்துத்துவா கோட்பாடு உள்ளிட்டவைகளை குறிக்கோளாக கொண்டு பால் தாக்கரேவால் சிவ சேனா கட்சி தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதிக எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்கள் ஏக்நாத் ஷிண்டே பக்கம் சென்றதால், உத்தவ் தாக்கரேவிற்கு பெரிய அடியாக அமைந்தது. இதனை தொடர்ந்து ஆட்சி கலைக்கப்பட்டு ஏக்நாத் ஷிண்டே மகாராஷ்டிராவின் முதல்வரானார்.

சிவசேனா வழக்கில் தீர்ப்பு… குஷியில் எடப்பாடி.. குழப்பத்தில் ஓபிஎஸ்?

இரு தரப்பினரும் சிவ சேனாவின் பெயர் மற்றும் வில் அம்பு சின்னத்திற்கு உரிமை கோரியதால், சின்னதாய் தற்காலிகமாக முடக்கி இருவருக்கும் வேறு சின்னம் அளிக்கப்பட்டது. தேர்தல் ஆணையத்தின் விசாரணைக்கு பிறகு சிவ சேனாவின் பெயர் மற்றும் சின்னம் ஏக்நாத் ஷிண்டே அணிக்கு ஒதுக்கப்பட்டு, அவர்கள் தான் உண்மையான சிவ சேனா எனவும் கூறப்பட்டது.

கர்நாடக பட்ஜெட் தாக்கல் செய்த பாஜக; காதில் பூ வைத்த காங்கிரஸ்… சூடுபிடிக்கும் 2023 தேர்தல்!

ஏக்நாத் ஷிண்டே வசம் உள்ள எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்கள், அவர்கள் பெற்ற வாக்குகள் அனைத்தையும் தேர்தல் ஆணையம் கருத்தில் எடுத்துக்கொண்டது. இதற்கு ஜனநாயக படுகொலை எனவும் இதற்காக 2000 கோடி செலவு செய்யப்பட்டது எனவும் உத்தவ் தாக்கரே தரப்பு கடுமையாக விமர்சனம் செய்தது. மக்கள் தரப்பு நியாயம் வென்றதாக ஏக்நாத் ஷிண்டே தீர்ப்பு குறித்து கூறினார்.

தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவை எதிர்த்து உத்தவ் தாக்கரே தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. தேர்தல் ஆணையம் எந்த ஒரு அடிப்படை முகாந்திரமும் இல்லாமல் இப்படி ஒரு தீர்ப்பை வழங்கி உள்ளதாகவும், இன்னும் அதிகப்படியான எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்கள் எங்கள் பக்கம் இருப்பதாகவும் உத்தவ் தாக்கரே தரப்பு அந்த மனுவில் குறிப்பிட்டு இருந்தனர். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் எனவும் எதிர்பார்க்க படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.