தமிழக மாணவர்கள் மீது தாக்குதல்: முதல்வர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம்

சென்னை: நேற்று பிப்ரவரி 19 (ஞாயிற்றுக்கிழமை) டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் 2 மாணவர் குழுக்களுக்கு இடையே மோதல் வெடித்தது. இந்த மோதலை அடுத்து ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜேஎன்யு) மீண்டும் ஒரு சர்ச்சை வெடித்துள்ளது. சத்ரபதி சிவாஜி மகாராஜின் பிறந்தநாளையொட்டி ஏபிவிபி மற்றும் இடதுசாரிகள் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் ஜேஎன்யுவில் தமிழ் மாணவர்கள் மீது ஏபிவிபி நடத்திய கோழைத்தனமான தாக்குதல் மற்றும் பெரியார், கார்ல் மார்க்ஸ் போன்ற தலைவர்களின் உருவப்படங்களை சேதப்படுத்தியது கண்டனத்திற்குரியது. பல்கலைக்கழக நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளார்.

இதுக்குறித்து தமிழ்நாடு முதல்வர் தனது ட்விட்டர் பதிவில், “ஜேஎன்யுவில் தமிழ் மாணவர்கள் மீது ஏபிவிபி நடத்திய கோழைத்தனமான தாக்குதல் மற்றும் பெரியார், கார்ல் மார்க்ஸ் போன்ற தலைவர்களின் உருவப்படங்களை சேதப்படுத்தியது வன்மையாக கண்டிக்கத்தக்கது மற்றும் அவர்கள் மீது பல்கலைக்கழக நிர்வாகம் கடுமையான நடவடிக்கைக்கு எடுக்க வேண்டும் எனக் கோருகிறேன்.

பல்கலைக்கழகங்கள் வெறும் பாடம் கற்றலுக்கு மட்டுமல்ல; கலந்துரையாடல், விவாதம், மாறுபட்ட கருத்துகளுக்குமான இடங்கள் ஆகும்.

தங்கள் உரிமைகளுக்காகப் போராடுகிற, மத்திய பா.ஜ.க. அரசை விமர்சிக்கிற மாணவர்கள் மீது வன்முறை வெறியாட்டம் கட்டவிழ்த்து விடப்படும் போதெல்லாம் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகப் பாதுகாப்பு பணியாளர்களும், டெல்லி காவல்துறையும் கண்மூடி வேடிக்கை மட்டுமே பார்க்கிறார்கள்.

மற்றொரு ட்வீட்டில், “தாக்குதலுக்குள்ளான மாணவர்களுக்கு ஆதரவாக என் உறுதிப்பாட்டைத் தெரிவித்துக்கொள்வதுடன், தாக்குதல் நடத்திய கயவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, தமிழ்நாட்டு மாணவர்களைப் பாதுகாக்குமாறு பல்கலைக்கழகத் துணைவேந்தர் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.