’இது சட்டவிரோத செயல்’.. நடிகர் ரோபோ சங்கருக்கு ரூ.2.5 லட்சம் அபராதம் விதித்த வனத்துறை!

சட்டவிரோத செயலில் ஈடுபட்டதற்காக நடிகர் ரோபோ சங்கருக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சில தினங்களுக்கு முன்னர் தனது ஹோம் டூர் வீடியோ ஒன்றில், தன்னுடைய வீட்டில் இரண்டு கிளிகள் வளர்ப்பது குறித்து வீடியோ பதிவிட்டு இருந்தார் நடிகர் ரோபோ சங்கர். இதை அறிந்த வனத்துறை அதிகாரிகள், வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டிற்கு அப்போதே சென்று விசாரித்தனர். ஆனால் அச்சமயத்தில் ரோபோ சங்கர், குடும்பத்துடன் வெளிநாடு சென்று இருப்பதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்ததன் பேரில், வீட்டில் அவர் வளர்த்து வந்த இரண்டு அலெக்சாண்டரியன் பச்சைக்கிளிகளையும் பறிமுதல் செய்து வனத்துறை அதிகாரிகள் எடுத்து சென்றனர். பறிமுதல் செய்யப்பட்ட கிளிகளை கிண்டியில் உள்ள சிறுவர் பூங்காவில் ஒப்படைத்தனர்.
image
இது குறித்து விசாரணை மேற்கொண்ட போது, அப்போதே ரோபோ சங்கர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதில், “கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பாக என் மனைவி பிரியங்கா சங்கரின் தோழி ஒருவர், பணி மாறுதல் காரணமாக வேறு ஊருக்கு சென்றுள்ளார். அப்போது அவர்கள் வீட்டில் வளர்த்த கிளிகளை எங்களை வளர்க்கச்சொல்லி கிப்ட்டாக கொடுத்து சென்றார். இரு கிளிகளுக்கும் ‘பிகில்- ஏஞ்சல்’ என பெயர் வைத்து வளர்த்துவந்தோம். இந்த வகைக் கிளிகளை வளர்க்கவேண்டும் என்பது எங்களுக்கு நீண்டநாள் ஆசையாக இருந்தது.
image
அதனால் வளர்த்து வந்தோம். எங்களது மகள் பிகில் படத்தில் நடித்தப்பிறகு இந்தக் கிளிகள் எங்களுக்கு கிடைத்தால் இந்த பெயரை சூட்டி வளர்த்து வந்தோம். பணம் கொடுத்து வாங்காமல், கிப்ட்டாக கிடைத்ததால் வனத்துறையிடம் அனுமதி வாங்கவேண்டும் என்பது எங்களுக்கு தெரியவில்லை. மற்றபடி வனத்துறையினரிடம் மறைக்கவேண்டும் என்ற எந்தத் திட்டமிட்ட நோக்கமும் இல்லை. இலங்கையில் இருந்து வந்ததும் நேரில் சென்று விளக்கம் அளிக்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்தக் கிளி, சங்கரை ரோபோ என செல்லமாக பெயரிட்டும், வீட்டில் உள்ளவர்களை அக்கா – அம்மா என அழைத்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
இதற்கு, வனத்துறை தரப்பில், “தனியார் யூடியூப் சேனல் ஒன்றில் ரோபோ சங்கரின் ஹோம் டூர் வீடியோ ஒன்றை வெளியிடப்பட்டிருந்தது. அதில் இந்த கிளிகள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்த நிலையில், அது எங்களது கவனத்திற்கு வந்தது. அதன்பேரில் நடவடிக்கை எடுத்து இருக்கிறோம்” என தெரிவிக்கப்பட்டது. 
இந்நிலையில் இலங்கையில் இருந்து ரோபோ சங்கர் சென்னை திரும்பியுள்ளார். அவர் வந்ததும் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
image
அதன்படி ரோபோ சங்கருக்கு, இரண்டரை லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக வெளிநாட்டு கிளி வைத்திருந்ததற்காக ரோபோ சங்கர் மீது வனத்துறை குற்றஞ்சாட்டியுள்ளது. அழிவின் விளிம்பில் உள்ள பறவையினங்களின் பட்டியலில், 4ஆவது வகையில் உள்ள இந்த பச்சை கிளிகளை வீடுகளில் வளர்ப்பதும், விற்பதும் இந்தியாவில் சட்டப்படி குற்றமாகும். வனவிலங்குகள் (பாதுகாப்பு) சட்டம், 1972 இல் பட்டியலிடப்பட்ட இந்தியப் பறவையான அலெக்ஸாண்ட்ரின் கிளி வளர்ப்பவர்கள் பிடிபட்டால், 6 மாதம் வரை சிறை தண்டனை கிடைக்கும் எனவும் வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.