பரபரப்பு! ரவுடிகள் மீது போலீஸ் துப்பாக்கிச்சூடு!!

அரிவாளால் வெட்ட முயன்ற ரவுடிகள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி எம்.ஜி.ஆர்.நகரில் வசிக்கும் துரை, அவரது சகோதரர் சோமசுந்தரம் மீது கொலை, நகை திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்நிலையில், நகை திருட்டு தொடர்பாக இருவரிடமும் உறையூர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் மோகன் என்பவர் விசாரணை மேற்கொண்டார்.

அதில் நகைகள், குழுமாயி அம்மன் கோயில் அருகே பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து நகை இருக்கும் இடத்தை கண்டறிய இருவரும் காவல் வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டனர்.

அப்போது, துரை, சோமசுந்தரம் ஆகிய இருவரும் காவல் ஆய்வாளர் மோகனை தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றதாக தெரிகிறது. பிறகு, முட்புதரில் மறைத்து வைத்திருந்த பட்டாக்கத்தி மற்றும் அரிவாளை கொண்டு ஆய்வாளர் மோகன் உள்ளிட்ட காவலர்களை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து தற்காப்புக்காக காவல்துறையினர் இருவர் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தி, பின்னர் இருவரையும் மடக்கி பிடித்தனர். காயமடைந்த ரவுடிகள் மற்றும் காவலர்கள் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அண்மையில் கோவை கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட 7 பேரில் இருவர் இதே போன்று துப்பாக்கிச்சூடு நடத்தி பிடிக்கப்பட்டனர். கைது செய்து அழைத்துவரும் போது தப்பிச் சென்று பின்னர் ஆயுதங்களால் காவலர்களை தாக்கியதாக கூறப்பட்டது.

அதே போன்று திருச்சியிலும் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது. பிடிபட்ட ரவுடிகள் இருவரிடமும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.