தருமபுரி மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான இறகுப்பந்து போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் வட்டாட்சியர் அதியமான் கலந்துக் கொண்டு விளையாடினார். அப்போது அவருக்குத் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
இந்த நிலையில் இவருடைய மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-
“தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான இறகுப்பந்து போட்டியில் பங்கேற்று விளையாடிக் கொண்டிருந்தபோது வட்டாட்சியர் அதியமான் மாரடைப்பால் உயிரிழந்தார் என்ற செய்தி மிகவும் வேதனை அளிக்கிறது.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அரசு ஊழியர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.