வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பெங்களூரு: இன்றுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் குடும்ப கட்சிகளாக உள்ளன என பா.ஜ., தேசிய தலைவர் நட்டா கூறியுள்ளார்.
கர்நாடகத்தின் சட்டசபை தேர்தல் இந்த ஆண்டில் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடப்பதற்கான வாய்ப்புள்ளது. இந்நிலையில் பா.ஜ.,வின் தேசியத் தலைவர் நட்டா இரண்டு நாள் பயணமாக இன்று (பிப்.,20) கர்நாடகா சென்றுள்ளார். இதையடுத்து கர்நாடகா மாநிலம் உடுப்பியில் நடந்த நிகழ்ச்சியில் நட்டா பேசியதாவது: கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் பிரதமர் மோடி அளித்த ரூ.33 ஆயிரம் கோடிக்கான திட்டங்களால், இந்தியாவின் 2-வது மிக பெரிய பொருளாதார மாநிலத்தில் ஒன்றாக கர்நாடகா மாற போகிறது.
இன்றுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் குடும்ப கட்சிகளாக உள்ளன. காங்கிரஸ், சமாஜ்வாதி, ராஷ்டீரிய ஜனதா தளம், சிவசேனா (உத்தவ் தாக்கரே), மம்தா பானர்ஜி, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், டி.ஆர்.எஸ்., பாரத ராஷ்டீரிய சமிதி மற்றும் அ.தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் குடும்ப கட்சிகள் தான். பா.ஜ., வின் வரலாற்றில் உடுப்பிக்கு என்று சிறப்பு இடம் உள்ளது. 1968-ம் ஆண்டில் முதன்முறையாக உடுப்பி மாநகராட்சியில் பா.ஜ., வெற்றி பெற்றது.
போரை நிறுத்தி, தனது நாட்டு மக்களை அங்கிருந்து வெளியேற்றிய இதுபோன்ற பிரதமர் உலகில் யாராவது இருக்கிறார்களா?. உக்ரைன் – ரஷ்யா போரின் போது, 22,500 இந்திய மாணவர்கள் பத்திரமாக இந்தியா திரும்பினர் என்றும் பெருமையுடன் கூறலாம்.
நீங்கள் அனைவரும் தொலைக்காட்சியில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை பார்த்திருப்பீர்கள். அவர் இன்னும் மாஸ்க் அணிந்துள்ளார், ஏனெனில் அமெரிக்காவில் 67% மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஆனால் இங்கு, யாரும் மாஸ்க் அணியாமல் இருப்பதையும், அனைவரும் நெருக்கமாக அமர்ந்திருப்பதையும் என்னால் பார்க்க முடிகிறது. பிரதமர் மோடியின் முயற்சியால் இந்தியாவில் உள்ள மக்களுக்கு 220 கோடி டோஸ் செலுத்தப்பட்டுள்ளதே அதற்கு காரணம். இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement